31
பேராதனை பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்தினுடைய கொழும்புக் கிளையின் 33ஆவது வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 31ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கும் ஆரம்பமாகி மதியம் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது.
கொழும்பு 07 இல் மலலசேகர மாவத்தையில் இல. 28/10 அமைந்துள்ள அபிவிருத்தி இலங்கை நிர்வாக நிறுவனத்தின் (SLIDA) பிரதான மண்டபத்தில் (Sanhinda) இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இது தொடர்பான விபரங்களை அறிந்துகொள்ள www.aaupcc.org எனும் இணையத்தளத்தினூடாகவோ அல்லது பொதுச் செயலாளர் பாலித சியம்பலபிட்டியவுடன் 0777741616 எனும் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தினூடாகவோ தொடர்புகொள்ள முடியுமென, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.