
சீரமைக்கப்பட்ட ரயில் பாதையில் பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில், கங்கொட மற்றும் கடிகமுவ இடையே மண்மேட்டில் மோதி இன்று காலை தடம்புரண்டது.
சீரமைக்கப்பட்ட பிரதான ரயில் பாதையில் பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ரயில் ஒன்று இன்று (05) காலை கங்கொட மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
தண்டவாளத்தில் சரிந்து வீழ்ந்திருந்த மண்மேடு மற்றும் பாறாங்கற்கள் மீது ரயில் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

