இந்திய துணை குடியரசுத் தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன்) அவர்களின் நினைவுத் அஞ்சல் தலையை புது தில்லியில் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை குடியரசுத் தலைவர், பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டிற்கு அரசு தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவினை பாராட்டினார். காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகளையும், இதுவரை உரிய அங்கீகாரம் பெறாத தமிழ் அரசர்கள், தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் முயற்சிகளையும் அவர் வெகுவாக பாராட்டினார்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் நினைவுத் தபால் தலையை வெளியிட்டது. இத்தகைய தொடர்ச்சியான அங்கீகார முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என துணை குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். இந்தியா ‘விக்சித் பாரத்’ நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மறைக்கப்பட்டத் தலைவர்களை அங்கீகரிப்பது நாட்டின் பண்பாட்டு பெருமையை மீட்டெடுக்க உதவும் என அவர் கூறினார்.
நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், ராஜ்ய சபா துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.





