கோலாலம்பூர்:
கடந்த ஆண்டு மாமன்னருக்கு எதிராக அவதூறு பதிவு ஒன்றைப் பதிவிட்டது தொடர்பாக, ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு எதிராக செஷன்ஸ் நீதிமன்றம் 4 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
குற்றஞ்சாட்டப்பட்ட 53 வயதான நோர்லி முஹமட் யூசோஃப் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு இந்த அபராதத் தொகை விதிக்கப்பட்டது, ஒருவேளை அபராதத் தொகை செலுத்த தவறினால் குற்றஞ்சாட்டப்பட்டவர் ஆறு மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
தையல்காரராக வேலை செய்து வரும் நோர்லி முஹமட், கடந்த டிசம்பர் 11ஆம் தேதி மதியம் 2 மணிக்கு பண்டார் ஶ்ரீ அலாமில் இந்த குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.