• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பேய் பிடித்திருப்பதாக கூறி பெண்ணுக்கு மாந்த்ரீக பூஜை.. மந்திரவாதி செய்த அதிர்ச்சி செயல்.. அடுத்து நடந்த ஷாக்!

GenevaTimes by GenevaTimes
July 8, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பேய் பிடித்திருப்பதாக கூறி பெண்ணுக்கு மாந்த்ரீக பூஜை.. மந்திரவாதி செய்த அதிர்ச்சி செயல்.. அடுத்து நடந்த ஷாக்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 08, 2025 7:52 PM IST

கர்நாடகாவில், மூடநம்பிக்கையால் பெண் மந்திரவாதி கீதாவை தாக்கியதில், கீதா உயிரிழந்தார்.

பேய் பிடித்திருப்பதாக கூறி பெண்ணுக்கு மாந்த்ரீக பூஜைபேய் பிடித்திருப்பதாக கூறி பெண்ணுக்கு மாந்த்ரீக பூஜை
பேய் பிடித்திருப்பதாக கூறி பெண்ணுக்கு மாந்த்ரீக பூஜை

கர்நாடகாவில் பேய் விரட்டுவதாகக் கூறி கண்மூடித்தனமாக தாக்கியதில் அப்பாவி பெண் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவத்தில், பெண் மந்திரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் சிவமுகா மாவட்டத்தில் உள்ள ஜம்பரகட்டா கிராமத்தில் வசித்தவர், 32 வயதான கீதா. கடந்த சில மாதங்களாக இவருக்கு உடல்நிலை கடும் மோசமடைந்து உடல் மெலிந்து உறக்கத்தை இழந்து தவித்து வந்துள்ளார். இரவில் அடிக்கடி அலறல் சத்தத்துடன் கத்தி கூச்சலிட்டு வந்துள்ளார். எங்கெங்கோ சென்று சிகிச்சை பெற்றும் அவருக்கு உடல் நிலை சரியாகவில்லை.

இதனால் கீதாவிற்கு பேய் பிடித்திருக்குமோ என்ற சந்தேகம் அவரது குடும்பத்தினரிடையே எழுந்துள்ளது. அங்குதான் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கீதாவை இதே ஊரில் உள்ள பெண் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அவர், கீதாவுக்கு பேய் பிடித்துள்ளது என்றும், மாந்த்ரீக பூஜை செய்து பேயை விரட்ட வேண்டும் என்றும் கூற, அவரது குடும்பத்தினர் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இரவில் பூஜைக்கு ஏற்பாடு செய்த பெண் மந்திரவாதி, கீதாவை மாந்திரி கட்டத்தில் அமர வைத்து தீ மூட்டி பூஜையைத் தொடங்கினார். ஒருகட்டத்தில் மந்திரத்தை முழங்கி கொண்டே விபூதி அடித்து கையில் இருந்த கம்பால் கண்மூடித்தனமாக கீதாவை அடித்துள்ளார். ஏற்கனவே உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த கீதா, மந்திரவாதியின் அடியை தாங்க முடியாமல் கத்தி கதறியுள்ளார்.

ஒரு கட்டத்தில் கீதா, மயங்கி விழுந்து சுயநினைவை இழந்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், கீதாவை மீட்டு உடனே மருத்துவமனைக்குத் தூக்கி சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கீதா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த ஊர் மக்கள், பெண் மந்திரவாதி குறித்து ஹொன்னுார் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையும் படிங்க: பாலியல் துன்புறுத்தல்.. பல பெண்களிடம் எல்லைமீறல்.. போலீசில் இளம்பெண் பகீர் புகார்!

உடனே ஊருக்குள் வந்த தனிப்படை போலீசார் பெண் மந்திரவாதியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு முறையாக சிகிச்சை அளித்து காப்பாற்றாமல், பேய் பிடித்திருப்பதாக அடித்தே காவு வாங்கி உள்ளனர். மூடநம்பிக்கை சில நேரம் உயிரையும் குடிக்கும் என்பதற்கு கீதாவின் மரணமும் ஒரு சாட்சியானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 08, 2025 7:52 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

பேய் பிடித்திருப்பதாக கூறி பெண்ணுக்கு மாந்த்ரீக பூஜை.. மந்திரவாதி செய்த அதிர்ச்சி செயல்.. அடுத்து நடந்த ஷாக்!

Read More

Previous Post

தொண்டையில் ரம்புட்டான் விதை சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

Next Post

18 வருஷத்தில் முதல் கோப்பை… உயர்ந்த ஆர்சிபியின் மதிப்பு!

Next Post
18 வருஷத்தில் முதல் கோப்பை… உயர்ந்த ஆர்சிபியின் மதிப்பு!

18 வருஷத்தில் முதல் கோப்பை... உயர்ந்த ஆர்சிபியின் மதிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin