உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர். இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, விராட் கோலி களம் இறங்கினர்.
கோலி 4 ரன்னில் ஆட்டமிழக்க கேப்டன் ரோஹித் 13 ரன்னில் நடையை கட்டினார். இதன் பின்னர் இணைந்த அக்சர் படேல் – ரிஷப் பந்த் இணை பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. அக்சர் 20 ரன்கள் எடுத்திருந்தபோது நசீம் ஷா வேகத்தில் போல்டாகி வெளியேறினார்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சூர்ய குமார் யாதவ் 7 ரன்னும், ஷிவம் துபே 3 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 7 ரன்னும் எடுத்தனர். ரவிந்திர ஜடேஜா, பும்ரா ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர். அதிகபட்சமாக ரிஷப் பந்த் 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.
19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
