பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்துள்ள நிலையில், ஈரானியத் தூதுக்குழுவும் பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Baqer Qalibaf) மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) ஆகியோர் அடங்கிய உயர்மட்டத் தூதுக்குழு பாகிஸ்தானிலிருந்து வெளியேறியுள்ளதாக ‘மெஹர்’ (Mehr) செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, வாஷிங்டனின் கோரிக்கைகளை ஈரான் நிராகரித்துவிட்டதாகத் தெரிவித்துவிட்டு, அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் இஸ்லாமாபாத்திலிருந்து வெளியேறியிருந்ததைத் தொடர்ந்து ஈரானியத் தரப்பும் தற்போது புறப்பட்டுள்ளது.
இணக்கப்பாடு எட்டப்படவில்லை
இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய முக்கிய முரண்பாடுகள் காரணமாக எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

இதேவேளை பேச்சுவார்த்தையின்போது அமெரிக்கா சமர்ப்பித்த நிபந்தனைகளை ஈரான் ‘ஏற்க விரும்பவில்லை எனவும் ஈரானின் இந்த நிலைப்பாடு, அமெரிக்காவை விட ஈரானுக்குத்தான் அதிக பாதகமான செய்தியாகும் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

