”நீட் தேர்வுக்கு திமுக-காங்கிரசே காரணம்”
நீட் தேர்வு குறித்து பேசிய அவர், “நீட் 2010 டிசம்பர் 21-ல் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இதை தடுக்க நாங்கள் முயற்சித்தோம், ஆனால் நீதிமன்றம் சென்றதால் அமலானது. திமுக 2021 தேர்தலில் நீட் ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் இப்போது முதலமைச்சர், இந்தியா கூட்டணி ஆட்சியில் இருந்தால் ரத்து செய்வோம் என்கிறார். 2010-லேயே ரத்து செய்திருக்கலாமே, இவ்வளவு உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம்” என்று விமர்சித்தார்.

