Last Updated:
பரமேஷ் “இனிமேல் இதுபோல் நடக்காது. நான் உங்கள் மகளை பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன்.” என்று வாக்குறுதி அளித்து அனுஷாவை மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்.
பெற்றோரின் எதிர்ப்பை மீறி தன்னை காதலித்து கரம் பிடித்த மனைவியை சாகும் வகையில் அடித்தே கொலை செய்த கொடூர கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் விகாரபாத் சாயாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஷ். அதே பகுதியைச் சேர்ந்த அனுஷாவுடன் பரமேஷ் காதலில் இருந்து வந்தார். இருவரின் காதலுக்கு அனுஷா பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அனுஷா தன்னுடைய காதலனை 3 மாதங்களுக்கு முன் கணவனாக கரம் பிடித்தார். புகுந்து வீட்டிற்கு வந்தது முதல் வரதட்சணை கேட்டு அனுஷாவை மாமியார் குடும்பத்தினர் தொல்லை கொடுக்க துவங்கினர்.
அவர்களுடன் சேர்ந்து கணவன் பரமேசும் வரதட்சணை கேட்டு மனைவிக்கு தொல்லை கொடுக்க துவங்கினார். இது பெரும் விவகாரமாக உருவெடுத்து ஒரு மாதத்திற்கு முன் பரமேஷ் மனைவியை கடுமையாக தாக்கி படுகாயம் அடைய செய்தார். தகவல் அறிந்து அங்கு வந்த அனுஷாவின் குடும்பத்தினர் தங்கள் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க செய்து தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்திருந்தனர்.
இந்நிலையில், அங்கு சென்ற பரமேஷ் “இனிமேல் இதுபோல் நடக்காது. நான் உங்கள் மகளை பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன்.” என்று வாக்குறுதி அளித்து அனுஷாவை மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். ஆனால் புகுந்து வீட்டில் மீண்டும் அனுஷாவுக்கு வரதட்சணை கொடுமை துவங்கியது. இந்த நிலையில் ஆவேசம் அடைந்த பரமேஷ் மனைவியை மயங்கி விழும் வகையில் தலையில் கட்டையால் கொடூரமாக தாக்கினார். இதனால் நிலைகுலைந்த அனுஷாவை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அனுஷா பரிதாபமாக மரணமடைந்து விட்டார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் அனுஷா தாக்கப்பட்டது தொடர்பாக பதிவாகி இருக்கும் காட்சிகளை கைப்பற்றி பரமேஷை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி தன்னை காதலித்து கரம் பிடித்த மனைவியை சாகும் வகையில் அடித்தே கொலை செய்த கொடூர கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்.. மூன்றே மாதத்தில் மனைவிக்கு நடந்த கொடூரம்.. கணவன் வெறிச்செயல்!


