The post பெற்றோர்களே உஷார்…!மின் படிக்கட்டுகளில் சிக்கிய சிறுவனின் கால்…! appeared first on SG Tamilan.
சிங்கப்பூர்: ஜூரோங் பாயின்ட் ஷாப்பிங் மாலில் 9 வயது சிறுவன் ஒருவன் மின் படிக்கட்டில் கால் சிக்கியதாக 8 வேர்ல்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை திறமையாக செயல்பட்டு சிறுவனின் காலைப் பாதுகாப்பாக அகற்றியது.
காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
சிறுவன் ரப்பர் காலணியை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்த மால் அதிகாரிகள் கட்டுமான அதிகாரிகளின் ஒத்துழைப்பை அணுகியுள்ளதாக கூறியது.
பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தை தொடர்பு கொண்டு ஆதரவு வழங்கப்பட்டு வருவதாக கடை நிர்வாகம் கூறியது.
மேலும் மின் படிகட்டுகளை பயன்படுத்தும் போது, குறிப்பாக குழந்தைகளை ஏற்றிச் செல்லும் போது கவனமாக இருக்குமாறு இந்தச் சம்பவம் பொதுமக்களுக்கு எச்சரிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.
Follow us on : click here
The post பெற்றோர்களே உஷார்…!மின் படிக்கட்டுகளில் சிக்கிய சிறுவனின் கால்…! appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin