• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பெற்றோரைக் கொன்றவரை கொன்று, எரித்த கடற்படை வீரர் கைது

GenevaTimes by GenevaTimes
August 28, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பெற்றோரைக் கொன்றவரை கொன்று, எரித்த கடற்படை வீரர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கலேவெல, தேவஹுவ பகுதியில் ஆறு வருடங்களுக்கு முன்பு தமது பெற்றோரைக் கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக, ஒருவரைத் தாக்கி கொலை செய்து, அவரது உடலை எரித்ததாக சந்தேகத்தின் பேரில் கடற்படை வீரர் ஒருவர் மகுலுகஸ்வெவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கலேவெல, தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 59 வயதான ஏ.ஜி. விமலசேன என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.



இறந்தவர் கடந்த 25 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மகுலகஸ்வெவ காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

காவல்துறையினர் விசாரணை


அதற்கமைய, இறந்தவர் சார்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை உடனடியாக விசாரித்த காவல்துறையினர், நேற்றையதினம் (26) காலை விடுமுறையில் இருந்த ஒரு கடற்படை வீரரைக் கைது செய்துள்ளனர்.

பெற்றோரைக் கொன்றவரை கொன்று, எரித்த கடற்படை வீரர் கைது | Navy Arrest For Killing Burning And Burying A Man

அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த கொலை தொடர்பான தகவல்கள் தெரிய வந்துள்ளன.


கடந்த 2019 ஏப்ரல் 16ஆம் திகதி, தேவஹுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த ஒரு தம்பதியினர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

இந்தக் கொலையைத் தொடர்ந்து, குறித்த தம்பதியரின் இரண்டு மகன்களும் தனிமையில் அநாதாரவாகியுள்ளதுடன் இளைய மகன் அப்போது கடற்படையில் இணைந்து தனது பயிற்சி முடித்திருந்தார்.

நீதிமன்றத்தில் முன்னிலை

குறித்த தம்பதியினரை இறந்த பெண்ணின் இரண்டு சகோதரர்கள் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். காணித் தகராறுதான் கொலைக்குக் காரணமென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ​​

பெற்றோரைக் கொன்றவரை கொன்று, எரித்த கடற்படை வீரர் கைது | Navy Arrest For Killing Burning And Burying A Man

அவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்ட பின்னர் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.


2019 ஆம் ஆண்டு தமது பெற்றோரின் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும், நீதிமன்றத்தில் இருந்து பிணையில் வந்த இறந்த பெண்ணின் சகோதரரே இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

‘அல்தான்துயாவைகொலை செய்ய உத்தரவிடப்பட்டதா’?    – Malaysiakini

Next Post

அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு… வாகனங்கள் மீது விழும் பாறைகள்…!  | இந்தியா

Next Post
அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு… வாகனங்கள் மீது விழும் பாறைகள்…!  | இந்தியா

அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு... வாகனங்கள் மீது விழும் பாறைகள்...!  | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin