பெரும்பாலான மக்கள் தற்போது தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். நிலையான மற்றும் பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். அந்த வகையில், நீண்ட காலமாக வங்கி நிலையான வைப்பு தொகைகள் (FDs) பாதுகாப்பான விருப்பமாக இருந்து வந்தது. இருப்பினும், சமீபத்தில் பல வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. இதன் விளைவாக, முதலீட்டாளர்கள் தற்போது FDs-களை விட அதிக வருமானத்தை வழங்கும் அரசு ஆதரவு பெற்ற திட்டங்களை தேடுகிறார்கள். ஏனென்றால், அங்கு பணம் பாதுகாப்பாக இருக்கும். அதன்படி, சிறந்த வட்டி விகிதங்களை வழங்கும் மற்றும் நம்பகமான விருப்பங்களாக கருதப்படும் மூன்று அரசு திட்டங்களை பற்றி தற்போது இந்த பதிவில் பார்ப்போம்.

