கோலாலம்பூர்:
பாஸ் (Pas) கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அமாட் சம்சுரி மொக்தார், பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திரெங்கானு மாநில மந்திரி பெசாரான அவர், எதிர்க்கட்சி கூட்டணியின் தலைமைத்துவத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
56 வயதான அவர், ரூ ரெண்டாங் (Ru Rendang) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான இவர், 2018 முதல் திரெங்கானு முதலமைச்சராகப் பணியாற்றி வருகிறார். 2023 மாநிலத் தேர்தலில் திரெங்கானுவில் உள்ள அனைத்து 32 இடங்களையும் PN கூட்டணி கைப்பற்றியதைத் தொடர்ந்து, அவர் இரண்டாவது முறையாக மந்திரி பெசாராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




