பணியாளர்கள் தாங்கள் வேலை பார்த்த பணிக்காலத்தை பொருட்படுத்தாமல் எம்ப்ளாய் பிராவிடண்ட் ஃபண்ட் (EPF) பங்களிப்புகளை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வித்ட்ரா செய்து கொள்ளலாம். எனினும், எம்ப்ளாயி பென்ஷன் திட்டத்தில் (EPS) வித்ட்ரா செய்வதற்கான விதி வேறுபடுகிறது. ஆகவே இதிலிருந்து பணத்தை வித்ட்ரா செய்வதற்கு அவசியமான சிறப்பு விதியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
EPF மற்றும் EPS பங்களிப்புகள்
ஒவ்வொரு மாதமும் உங்களுடைய அடிப்படை சம்பளம் மற்றும் டியர்னஸ் அளவன்சில் (DA) இருந்து 12 சதவீதத்தை நீங்களும் நீங்கள் பணிபுரியும் நிறுவனமும் எம்பிளாய் பிராவிடண்ட் ஃபண்டில் பங்களிப்பீர்கள். நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பங்களிப்பில் இருந்து 3.67 சதவீதம் உங்களுடைய EPF அக்கவுண்டிற்கும், 8.33 சதவீத தொகை உங்களுடைய EPS அக்கவுண்டிற்கும் டெபாசிட் செய்யப்படும்.
நீங்கள் 6 மாத காலம் வேலை செய்திருந்தாலும் சரி அல்லது 15 வருடங்களாக வேலையில் இருந்தாலும் சரி, விதிகளுக்கு உட்பட்டு நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களுடைய EPF பணத்தை வித்ட்ரா செய்து கொள்ளலாம். ஆனால் EPS பணத்தை வித்ட்ரா செய்வதற்கு நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட விதிகளை பின்பற்ற வேண்டும்.
EPS வித்ட்ராயல் சம்பந்தப்பட்ட விதிகள்
6 மாதங்களுக்கும் குறைவாக பணிபுரிந்துள்ள நபர்களுக்கு:
நீங்கள் 6 மாதங்களுக்கும் குறைவாக வேலை பார்த்து இருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய பென்ஷன் பணத்தை உங்களால் வித்ட்ரா செய்ய முடியாது. EPS அக்கவுண்டில் 6 மாதங்களுக்கும் அதிகமாக செய்யப்படும் பங்களிப்புகளை மட்டுமே ஒருவரால் வித்ட்ரா செய்ய இயலும்.
10 வருடங்கள் அல்லது அதற்கு மேல் வேலை செய்தவர்களுக்கு:
ஒருவேளை நீங்கள் 10 வருடங்கள் அல்லது அதற்கு மேலாக (அல்லது 9 வருடங்கள் மற்றும் 6 மாதங்களுக்கு மேல்) வேலை பார்த்து உள்ளீர்கள் என்றாலும், EPS பணத்தை உங்களால் வித்ட்ரா செய்ய முடியாது. மாறாக, EPFO இல் இருந்து பென்ஷன் பெறுவதற்கு நீங்கள் தகுதி பெறுகிறீர்கள். அதனை நீங்கள் 50 முதல் 58 வயதுக்கு உட்பட்ட காலக்கட்டத்தில் பெற ஆரம்பிக்கலாம்.
இதையும் படிக்க:
வருமான வரித்தாக்கல் செய்யும்போது CA தவறு செய்தால் யார் பொறுப்பு? அபராதம் யார் செலுத்த வேண்டும்?
6 மாதங்கள் மற்றும் 10 வருடங்களுக்கு இடைப்பட்ட பணிக்காலம்:
ஒருவேளை உங்களுடைய பணிக்காலம் 9 வருடங்கள் மற்றும் 6 மாதங்களுக்கும் குறைவாக இருந்தால் EPFOஇல் இருந்து பென்ஷன் பெறுவதற்கு நீங்கள் இன்னும் தகுதி பெறவில்லை. உங்களுடைய EPF மற்றும் EPS தொகைகளை முழுமையாக பெற்று, உங்கள் இறுதி செட்டில்மெண்டை நிறைவு செய்யலாம். அதன் பிறகு உங்களுடைய அக்கவுண்டை EPFO மூடிவிடும்.
EPS பணத்தை கிளைம் செய்வது எப்படி?
10 வருடங்களுக்கும் குறைவான பணிக்காலம்:
நீங்கள் 10 வருடங்களுக்கும் குறைவாக வேலை பார்த்துள்ளீர்கள் என்றால் உங்களுடைய EPF இறுதி செட்டில்மெண்ட் செய்யும் பொழுது, EPS அக்கவுண்டில் நீங்கள் டெபாசிட் செய்த மொத்த பணத்தையும் வித்ட்ரா செய்யலாம். இந்த தொகையை வித்ட்ரா செய்வதற்கு நீங்கள் 10C படிவத்தை நிரப்ப வேண்டும்.
இதையும் படிக்க:
Investment Tips : மாதம் ரூ. 3000.. ரூ. 1 கோடி வரை பெறலாம்… எப்படி தெரியமா?
ஓய்வு காலத்திற்குப் பிறகு கிடைக்கும் பென்ஷன் பலன்கள்:
ஓய்வு காலத்திற்குப் பிறகு பென்ஷன் பலன்களை கிளைம் செய்வதற்கு நீங்கள் 10D படிவத்தை நிரப்ப வேண்டும். EPFOஇல் இருந்து பென்ஷன் பெறுவதற்கும் ஒருவர் எந்த சூழ்நிலையிலும் இந்த படிவத்தை பயன்படுத்தலாம்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)