Last Updated:
உங்களுடைய PF அக்கவுண்டில் இருந்து ஒரு அட்வான்ஸ் தொகையை எடுக்க நீங்கள் விரும்பினால் அதற்கு நீங்கள் காம்போசிட் கிளைம் (ஆதார்) அல்லது காம்போசிட் கிளைம் (நான்-ஆதார்) படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஒருவேளை நீங்கள் எம்பிளாயிஸ் பிராவிடண்ட் ஃபண்ட் (EPFO) மெம்பராக இருந்தால் உங்களுடைய பிராவிடண்ட் ஃபண்ட் அக்கவுண்ட் பேலன்ஸை சரிபார்ப்பது முதல் ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாற்றலாகும்போது அக்கவுண்ட்டை டிரான்ஸ்ஃபர் செய்வது வரை பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
எனினும் சரியான காரணத்திற்கு சரியான படிவத்தை பூர்த்தி செய்வது என்பது இங்கு முக்கியமான ஒரு விஷயமாக அமைகிறது. சரியான படிவத்தை நீங்கள் சமர்ப்பிக்காவிட்டால் உங்களுடைய கோரிக்கை செயலாக்கம் செய்யப்படாது.
நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது:
- ஒருவேளை உங்களுடைய PF அக்கவுண்டில் இருந்து ஒரு அட்வான்ஸ் தொகையை எடுக்க நீங்கள் விரும்பினால் அதற்கு நீங்கள் காம்போசிட் கிளைம் (ஆதார்) அல்லது காம்போசிட் கிளைம் (நான்-ஆதார்) படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
- ஒருவேளை UAN போர்ட்டலில் உங்களுடைய ஆதார், வங்கி விவரங்கள் மற்றும் படிவம் 11 தகவல்கள் ஏற்கனவே அப்டேட் செய்யப்பட்டு இருந்தால் ஆதார் பதிப்பு சரியானதாக இருக்கும். இந்த சூழ்நிலையில் உங்களுடைய நிறுவனத்தின் கையெழுத்து இல்லாமல் நேரடியாக EPF அலுவலகத்திற்கு சென்று படிவத்தை சமர்ப்பிக்கலாம்.
- உங்களுடைய PF பேலன்ஸை LIC பாலிசிக்கு பயன்படுத்த நினைத்தால் நீங்கள் படிவம் 14 மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
- ஒருவேளை நீங்கள் 10 வருட சேவை காலத்தை பூர்த்தி செய்திருந்தால் பென்ஷன் பலன்களை கிளைம் செய்வதற்கு படிவம் 10D-ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.
- சேவை காலத்தை பூர்த்தி செய்யாமலேயே நீங்கள் 58 வயதை அடைந்துவிட்டால் காம்போசிட் கிளைம் (ஆதார் அல்லது நான்-ஆதார்) படிவம் மூலமாக வித்ட்ராயல் பலன்களை கிளைம் செய்யலாம்.
- ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறி, மற்றொரு நிறுவனத்தில் சேரும்போது படிவம் 13-ஐ சமர்ப்பிப்பதன்மூலம் பிராவிடண்ட் ஃபண்ட் பேலன்ஸை டிரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம்.
- ஒருவேளை ஒரு மெம்பர் 58 வயதை அடைவதற்கு முன்பே சேவையில் இருக்கும்போது இறந்து போகும் பட்சத்தில் அவருடைய குடும்பத்தினர் படிவம் 20-ஐ பயன்படுத்தி இறுதி PF செட்டில்மென்டை கிளைம் செய்யலாம்.
- மேலும், படிவம் 10D-ஐ பூர்த்தி செய்வதன் மூலம் மாத பென்ஷன் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் படிவம் 51F மூலமாக EDLI திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் பலன்களை பெறலாம்.
ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறி, வேறொரு நிறுவனத்தில் பணிபுரியாமல் இருக்கும் பட்சத்தில்:
இது போன்ற சூழ்நிலையில் 2-மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு நீங்கள் பென்ஷன் ஃபண்டில் இருந்து ஒரு திட்ட சான்றிதழ் மற்றும் இறுதி PF செட்டில்மென்ட் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மீண்டும் காம்போசிட் கிளைம் (ஆதார் அல்லது நான்-ஆதார்) படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதிலும், குறிப்பாக நீங்கள் 10-வருட சேவை காலத்தை பூர்த்தி செய்திருந்தால் இந்த படிவத்தை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.
சரியான படிவத்தை பயன்படுத்துவது உங்களுடைய நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, நீங்கள் சமர்ப்பிக்கும் PF கோரிக்கைகள் நிராகரிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. பணத்தை வித்ட்ரா செய்வதற்கு, அக்கவுண்ட்டை டிரான்ஸ்ஃபர் செய்ய விண்ணப்பிப்பதற்கு என்று குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ற படிவத்தை EPFO கொண்டிருக்கிறது. அதனை சரியாக தேர்ந்தெடுத்து, நிரப்பி சமர்ப்பிப்பது அவசியம்.
August 25, 2025 6:40 PM IST


