மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் பெண் விமானி ஒருவர் சமூக வலைதளங்களில் காதலில் சிக்கி 650,000 ரிங்கிட்டை (190,000 வெள்ளி) இழந்துள்ளார்.
அந்த நபருடன் 2 மாதங்களாக விமானி பேசி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணை வணிக திட்டத்தில் சேருமாறு கூறியுள்ளார்.
அந்த நபர் தன்னை சிங்கப்பூரர் என விமானிக்கு அறிமுகம் செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் நபர் பெண்ணை அழகுசாதன முகவராக சேர அழைத்திருக்கிறார்.

