மேலும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சம்பளப் பட்டியல் தரவு, முறைசாரா துறையில் பெண்களின் அதிகரித்துவரும் பங்களிப்பை எடுத்துக்காட்டுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில், 1.56 கோடி பெண்கள் முறைசாரா பணியாளர்களாக சேர்ந்துள்ளனர். இதற்கிடையில், ஆகஸ்ட் மாத நிலவரப்படி 16.69 கோடிக்கும் மேற்பட்ட அமைப்புசாரா பெண் தொழிலாளர்களின் பதிவுகளை e-Shram பதிவு செய்துள்ளது.


