150 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒரு நிலம் தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு பெண் சந்தேகநபரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் சந்தேக நபர், வாடகை வீட்டில் தங்கியிருந்தபோது போலி பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை உருவாக்கியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அவர் காவல்துறையினரை தவிர்த்து தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
காவல்துறையின் கோரிக்கை
அதன்காரணமாக அவர் தங்கியிருக்கும் வீட்டின் இருப்பிடத்தை அதிகாரிகளால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனவே, சந்தேக நபரான பெண் தொடர்பான ஏதேனும் தகவல்கள் அல்லது தடயங்களை கிடைத்தால்,
காவல்துறை ஹாட்லைன்கள் 011- 2434504 அல்லது 011 – 2422176 மூலமாக காவல்துறையினருக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

