10

இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சமாக 250 ரூபாயையும், அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாயையும் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 1.5 லட்சம் ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்றால், ஒவ்வொரு மாதமும் நீங்கள் இந்த முதலீட்டிற்காக 12,500 ரூபாயை சேமிக்க வேண்டும். 15 வருடங்களில் நீங்கள் மொத்தமாக 22,50,000 ரூபாயை முதலீடு செய்து இருப்பீர்கள். தற்போது இந்த திட்டத்திற்கு 8.2% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. உங்கள் பெண் பிள்ளை 21 வயதை அடையும் பொழுது இந்த திட்டம் மெச்சூரிட்டி ஆகும். அந்த சமயத்தில் உங்களுக்கு மொத்தமாக 46,77,578 ரூபாய் வட்டியாக கிடைக்கும்.