[ad_1]
Last Updated:
மகாராஷ்டிரா கர்மாலாவில் சட்டவிரோத மண் அள்ளல் விசாரணையில் ஐபிஎஸ் அஞ்சனா கிருஷ்ணாவை துணை முதல்வர் அஜித்பவார் தடுத்தது சர்ச்சையாகியுள்ளது.
சட்டவிரோதமாக மண் அள்ளிய நபர்களை விசாரிக்கச் சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியை மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித்பவார் தடுத்தது சர்ச்சையாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கர்மாலா எனும் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக செம்மண் அள்ளப்படுவதாகப் புகார் வந்துள்ளது. இதனை அடுத்து, அது குறித்து விசாரிக்க பெண் ஐபிஎஸ் அதிகாரியான அஞ்சனா கிருஷ்ணா அந்தக் கர்மாலா பகுதிக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு மகாராஷ்டிரா ஆளும் பாஜக கூட்டணியில் இருக்கும் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்துள்ளனர். அவர்களிடம் மண் அள்ளுவதை நிறுத்தச் சொல்லி ஐபிஎஸ் அதிகாரி அஞ்சனா கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து ஐபிஎஸ் அதிகாரியிடம் அங்கிருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், அங்கிருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாபா ஜக்தாப், துணை முதலமைச்சர் அஜித்பவாருக்கு போன் செய்து விவரத்தைக் கூறியுள்ளார்.
பின்னர் ஐபிஎஸ் அதிகாரியிடம் செல்போனில் பேசிய அஜித்பவார், நான் துணை முதல்வர், மண் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார். அதற்கு நீங்கள் யார் எனக் கேட்ட பெண் அதிகாரி என்னுடைய எண்ணுக்கு அழையுங்கள் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
महाराष्ट्र के उप मुख्यमंत्री अजीत पवार जी का एक फोन कॉल तेज़ी वायरल हो रहा है । जिसमें वो खान माफिया पर करवाई कर रही, ईमानदार IPS अफसर अंजली जी को करवाई रोकने के लिए, दबाव बनाते हुए दिख रहे है ।
AJIT PAWAR: डिप्टी सीएम बोल रहा हूं। अपनी कार्यवाही रोको।।
IPS ANJALI: अवैध खनन का… pic.twitter.com/uCwnmyhMpj
— Dawood Nadaf (@DawoodNadaf10) September 5, 2025
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுனில் தட்கரே, “கட்சித் தொண்டர்களை சமாதானப்படுத்த அஜித்பவார் ஐபிஎஸ் அதிகாரியை கண்டித்திருக்கலாம். அவர் நடவடிக்கையை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
பெண் ஐபிஎஸ் அதிகாரியை அஜித்பவார் நேரடியாக போன் மூலம் பேசி அவரது பணியைச் செய்யவிடாமல் தடுத்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பாபா ஜக்தாப் உட்பட 15 பேர் மீது காவல்துறையினர் தற்போது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
September 05, 2025 3:25 PM IST
பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டிய துணை முதல்வர் அஜித்பவார்! மகாராஷ்டிராவில் நடந்த பகீர் சம்பவம்