Last Updated:
பெண் எம்.பி.க்களுக்கு எதிரான கருத்துகளுக்காக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பெண் எம்.பி.க்களுக்கு எதிரான கருத்துகளுக்காக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. கல்யாண் பானர்ஜி, மழைக்கால கூட்டத்தொடரின் எஞ்சிய காலம் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததை அடுத்து, அக்கட்சியின் அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேர் என்.சி.பி.ஐ. கட்சியில் இணைந்தனர்.
இவர்கள் மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களிடம் விலகி தனியாக அமர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மம்தா பானர்ஜியின் தீவிர விசுவாசியாக அறியப்படும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. கல்யாண் பானர்ஜி, கட்சியில் இருந்து விலகி சென்ற எம்.பி.க்கள் மற்றும் என்.சி.பி.ஐ. கட்சி எம்.பி.க்களுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, சதாப்தி ராய், மிட்டாலி பாக் உள்ளிட்ட பெண் எம்.பி.க்களுக்கு எதிராக கல்யாண் பானர்ஜி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகவும், இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை அவரது அறையில் சந்தித்து பெண் எம்.பி.க்கள் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


