• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பெண்கள் இறுக்கமான ஆடை அணிய சிரியாவில் கட்டுப்பாடு | ”Women should not dress too tightly” – Dress code in Syria

GenevaTimes by GenevaTimes
June 11, 2025
in உலகம்
Reading Time: 6 mins read
0
பெண்கள் இறுக்கமான ஆடை அணிய சிரியாவில் கட்டுப்பாடு | ”Women should not dress too tightly” – Dress code in Syria
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டமாஸ்கஸ்: பொது இடங்களில் பெண்கள் தளர்வான ஆடைகளை அணிய வேண்டும், கடற்கரைகள் மற்றும் நீச்சல்குளங்களுக்குச் செல்லும்போது புர்கா அல்லது முழு உடலையும் மறைக்கும் நீச்சலுடைகளை அணிய வேண்டும் என்று சிரியாவின் புதிய இஸ்லாமிய அரசு உத்தரவிட்டுள்ளது.

சிரியாவில் ஆட்சியில் இருந்த பஷார் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. இதை அடுத்து அஹமது அல் ஷரா தலைமையிலான இடைக்கால இஸ்லாமிய அரசு கடந்த டிசம்பரில் ஆட்சிப் பொறுப்பேற்றது.

இடைக்கால அரசு ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆன நிலையில், தற்போது ஆடைக்கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, அதிபர் அஹமது அல் ஷரா ஒப்புதலுடன் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘கடற்கரைகளுக்குச் செல்லும் பெண்கள் புர்கா அல்லது உடலை மறைக்கும் பிற கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

நீச்சல் குளங்கள் தவிர்த்த பொது இடங்களில், பெண்கள் தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். தோள்கள் மற்றும் முழங்கால்களை மறைக்கும்படியான ஆடைகளை அணிய வேண்டும். ட்ரான்ஸ்பரண்ட் ஆடைகள் மற்றும் இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் ஆண்கள் மேலாடையின்றி இருக்க அனுமதி இல்லை.

அதேநேரத்தில், ஆடம்பரமான தனியார் கடற்கரை கிளப்புகள் மற்றும் இடங்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரிய அரசின் இந்த அறிவிப்புக்கு சமூக ஊடகங்களில் கலவையான எதிர்வினைகள் பதிவாகி உள்ளன. ஷாசா என்ற சிரிய பெண் ஒருவர், “அரசின் இந்த உத்தரவு சிரியர்களின் தனிப்பட்ட சுதந்திரங்கள் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது. சிரியா ஒரு மிதவாத மற்றும் திறந்த நாடு. அது கட்டுப்பாடுகள் இல்லாமல் அனைவருக்கும் இடமளிக்க வேண்டும். புதிய உத்தரவு குறித்து அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், யஹ்யா கபிஷோ என்ற நபர் புதிய விதிகளுக்கு ஆதரவை தெரிவித்துள்ளார். இது சிரிய சமூகத்தின் கலாச்சாரத்தை மதிக்க வேண்டிய கடமையை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.



Read More

Previous Post

G Pay பயன்படுத்துபவர்களா நீங்கள்? இந்த விதிகள் விரைவில் மாற்றம்

Next Post

இறந்த உப்சி மாணவர்களின் பிடிபிடிஎன் கடன்கள் முழுமையாகச் செலுத்தப்பட்டன – அமைச்சர் – Malaysiakini

Next Post
இறந்த உப்சி மாணவர்களின் பிடிபிடிஎன் கடன்கள் முழுமையாகச் செலுத்தப்பட்டன – அமைச்சர் – Malaysiakini

இறந்த உப்சி மாணவர்களின் பிடிபிடிஎன் கடன்கள் முழுமையாகச் செலுத்தப்பட்டன – அமைச்சர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin