Last Updated:
எக்ஸ் நிறுவனத்தின் க்ரோக் ஏஐ பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரிப்பதாக புகார்; மத்திய அரசு 72 மணி நேரத்தில் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.
எக்ஸ் வலைதளத்தின் க்ரோக் ஏஐ தளம் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வழங்குவதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக எக்ஸ் நிறுவனம் 72 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமென மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக, சிவசேனா உத்தவ் பிரிவின் மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், க்ரோக் உரையாடல் தளம் பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக காட்டுவது, உடைகளில் மாற்றம் செய்வது போன்ற கட்டளைகளுக்கு பதிலளித்து சித்தரிப்பதாக அவர் புகார் அளித்துள்ளார்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் இதுதொடர்பாக இந்தியாவுக்கான எக்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரிக்கு 4 பக்க கடிதம் எழுதியுள்ளது. அதில், போலியான கணக்குகளை உருவாக்கி பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் படங்கள், காணொளிகளை உருவாக்கி, பகிர்வதை தடுக்க வேண்டும் எனவும், ஏற்கனவே உருவாக்கப்பட்ட , உள்ளடக்கங்களை உடனடியாக நீக்கவும், வலியுறுத்தியுள்ளது.
வரும் 5ஆம் தேதிக்குள் 72 மணி நேரத்தில் இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து உரிய விளக்கம் அளிக்கவும் மத்திய அரசு அந்த கடிதத்தில் விளக்கம்கேட்டுள்ளது
பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரிக்கும் Grok ஏஐ தளம்… பெண் எம்.பி புகாரை தொடர்ந்து மத்திய அரசு கடிதம்


