Last Updated:
1989 ஆம் ஆண்டிலிருந்து ஈரானின் உச்ச தலைவராக ஆயத்துல்லா கமேனி இருந்து வருகிறார். அரசியல் மற்றும் மத ரீதியிலான முடிவுகளை எடுப்பதில் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார்.
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரானின் உயர்மட்ட தலைவரான ஆயத்துல்லா கமேனியின் முந்தைய சமூக வலைதள பதிவுகள் வைரலாகி வருகின்றன.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக கூறி அந்நாட்டின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் விதமாக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. அணுசக்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்துகிறது. இதற்கு ஆப்பரேஷன் ரைசிங் லயன் என பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரானும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதால் சர்வதேச அளவில் பதற்றம் காணப்படுகிறது. இந்த விவகாரத்தில் உலக வல்லரசு நாடுகளும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றன. மோதலை தவிர்க்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். இதேபோன்று இந்த மோதல் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக்கூடாது என ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது.
இரு நாடுகளிலும் இழப்புகள் ஏற்பட்டு வரக்கூடிய சூழலில் இதனை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர சில நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இஸ்ரேல் உடனான மோதலில் ஈரானின் மதத் தலைவரும், அந்நாட்டின் உச்ச தலைவருமான ஆயத்துல்லா கமேனி இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதனால் அவருடைய எக்ஸ் சமூக வலைதளத்தை பின்பற்றுவோரின் பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இஸ்ரேலியர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று கமேனி தனது எக்ஸ்தள பதிவில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அவரது முந்தைய எக்ஸ் தள பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் கமேனி கூறியிருப்பதாவது- பெண்ணின் தேவைகளை புரிந்து கொள்வது என்பது ஆணுடைய கடமை. பெண்ணின் உணர்வுகளை ஆண் பொருட்படுத்தாமல் இருக்கக் கூடாது. ஆண்களை விடவும் பெண்கள் வலிமையானவர்கள்.
தங்களது அறிவாற்றலால் நேர்த்தியான குணத்தால் ஆண்களை பெண்களால் முழுமையாக கட்டுப்படுத்த முடியும். நேரு எழுதிய உலக சரித்திரம் புத்தகத்தை படிப்பதற்கு முன்பாக நான் காலனி ஆதிக்கத்துக்கு முன்பிருந்த இந்தியாவை அறிந்திருக்கவில்லை என்பது உள்ளிட்ட பதிவுகளை அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
Women are stronger than men. Women can completely control and influence men with their wisdom and delicacy. May 11, 2013
— Khamenei.ir (@khamenei_ir) March 7, 2018
Man has a responsibility to understand #woman’s needs and feelings and must not be neglectful toward her #emotional state
— Khamenei.ir (@khamenei_ir) September 15, 2013
1989 ஆம் ஆண்டிலிருந்து ஈரானின் உச்ச தலைவராக ஆயத்துல்லா கமேனி இருந்து வருகிறார். அரசியல் மற்றும் மத ரீதியிலான முடிவுகளை எடுப்பதில் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார்.
June 21, 2025 7:46 PM IST
‘பெண்களின் தேவைகளை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும்’ – வைரலாகும் ஈரான் தலைவர் கமேனியின் பதிவு


