ஏற்கனவே பணவீக்கம் மற்றும் தயாரிப்பு பற்றாக்குறையின் பிடியில் சிக்கித் தவிக்கும் கியூபா மக்களுக்கு, எரிபொருள் விலையில் 500 சதவீத உயர்வை எவ்வாறு சமாளிப்பது என்பது புரியாமல் திணறி வருகின்றனர்.
கம்யூனிஸ்ட் தீவாக பார்க்கப்படும் கியூபா நாட்டின் அரசாங்கம், பணப் பற்றாக்குறை, அதன் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையைக் குறைக்க முற்படும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஐந்து மடங்கு அதிகரிப்பை கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. ஒரு லிட்டர் வழக்கமான பெட்ரோலின் விலை 25 பெசோசில் (20 அமெரிக்க சென்ட்) இருந்து 132 பெசோசாக உயரும், அதே சமயம் பிரீமியம் பெட்ரோலின் விலை 30ல் இருந்து 156 பெசோசாக உயரும் என்று அறிக்கை கூறியுள்ளது.
11 மில்லியன் மக்கள் வாழும் கியூபா நாடு, 1990-களில் சோவியத் பிளாகின் சரிவுக்குப் பிறகு, கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் விளைவுகள், சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கத் தடைகளின் இறுக்கம் மற்றும் பொருளாதாரத்தின் கட்டமைப்பு பலவீனங்கள் ஆகியவற்றின் காரணமாக அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருகிறது. அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, கியூபா பொருளாதாரம் 2023-ல் இரண்டு சதவிகிதம் சுருங்கியது, அதே நேரத்தில் பணவீக்கம் 2023-ல் 30 சதவிகிதத்தை எட்டியது. வல்லுநர்கள் இது குறைவான மதிப்பீடாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
எரிபொருள் மற்றும் பிற அடிப்படைகள் ஏற்கனவே கிடைப்பது கடினமாக இருப்பதாக தெரிகிறது. கியூபாவின் அரசு, கிட்டத்தட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் மானியம் வழங்குகிறது, எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என்று கடந்த மாதம் ஏற்கனவே அறிவித்தது. கடந்த திங்களன்று அரசு, முக்கிய குடியிருப்பு நுகர்வோருக்கான மின்சாரத்தின் விலையில் 25 சதவிகிதம் உயர்வையும், இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பையும் உறுதி செய்தது.
Also Read |
கல்யாண செலவு ரூ.491 கோடி… அரண்மனையில் கொண்டாட்டம்… இந்தியாவே திரும்பி பார்த்த அடடே திருமணம்!
உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது கியூபாவில் எரிபொருள் மலிவாக இருக்கலாம் என்று பொருளாதார நிபுணர் ஒமர் எவர்லெனி பெரெஸ் AFPயிடம் கூறினார், ஆனால் நீங்கள் அதை நாட்டில் உள்ள சம்பளத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அது மிகவும் விலை உயர்ந்தது என்றும் கூறினார். கியூபா நாட்டில் சராசரி குடிமகன் பெறும் சம்பளம் மாதத்திற்கு சுமார் $40-க்கு சமம் எனவும் தெரிகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
