Last Updated:
பெட்ரோல் டீசல் கலால் குறைத்தால் 1 லட்சம் கோடி வருவாய் இழப்பு என நிர்மலா சீதாராமன், எரிபொருள் உரம் அந்நியச் செலாவணி மீது கவனம், எம்எஸ்எம்இக்கு 8 லட்சம் கோடி 45 நாளில் வழங்க உத்தரவு
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்தால், அரசுக்கு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வங்கி ஒன்றின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நிர்மலா சீதாராமன், நாட்டில் நிலவும் சூழ்நிலை குறித்து சிலர் தேவையில்லாத அவநம்பிக்கையையும் அச்சத்தையும் பரப்பி வருவதாகக் குறிப்பிட்டார். மக்களுக்கு வார்த்தைகளாலும், செயல்களாலும் நம்பிக்கையளிக்க வேண்டுமே தவிர, வீண் அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது என்று கூறிய நிதி அமைச்சர், தற்போதைய சூழலில் எரிபொருள், உரம் மற்றும் அந்நியச் செலாவணி ஆகிய மூன்றிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
Delhi,Delhi,Delhi
“பெட்ரோல், டீசல் வரியை குறைத்தால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்” – அமைச்சர் நிர்மலா சீதாராமன் –

