ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி ஆகியோர், பெங்களூருவில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர மடத்திற்கு வருகை தந்தனர்.
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் பெங்களூரு ஜெயநகரில் உள்ள ராகவேந்திர சுவாமி மடத்துக்கு சென்றனர். அவர்களுடன், அக்ஷதாவின் பெற்றோரான என்.ஆர்.நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தி ஆகியோரும் தரிசனம் செய்தனர். மேலும், கோயிலில் நடைபெற்ற பூஜைகளிலும் அவர்கள் கலந்து கொண்டனர்.
Also Read:
ஆப்பிளின் சாதனை முறியடிப்பு! உலகின் அதிக மதிப்புமிக்க நிறுவனம் எது தெரியுமா?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக். இந்திய மரபுகள் மீதான தனது நம்பிக்கையை பற்றி ரிஷி சுனக் எப்போதும் வெளிப்படையாகவே இருந்து வருகிறார். மேலும், இந்தியாவுடனான தனது தொடர்புகள் குறித்து மிகவும் பெருமைப்படுவதாகவும், இந்தியா மற்றும் இந்திய மக்களுடன் எனக்கு எப்போதும் தொடர்பு இருக்கும் என்றும் ரிஷி சுனக் ஒருமுறை குறிப்பிட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனக், இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் பிறந்து வளர்ந்தார். கடந்த ஆண்டு, அவர் மனைவி அக்ஷதாவுடன் டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல், இங்கிலாந்து பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி வார இறுதியில், ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் லண்டனில் உள்ள BAPS Shri Swaminarayan Mandir-ல் சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
