Last Updated:
கர்நாடகாவின் வீர புதல்வர், ஃபீல்ட் மார்ஷல் கே.எம்.கரியப்பாவின் சேவையை நினைவுகூறும் வகையில், பெங்களூருவில் வரவிருக்கும் ஒரு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அவரது பெயரை சூட்டுவது பற்றி முதலமைச்சருடன் விரைவில் ஆலோசனை நடைபெறும் என துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு மெட்ரோவின் ஒரு ரயில் நிலையத்திற்கு இந்தியாவின் முதல் ஃபீல்ட் மார்ஷலான கே.எம்.கரியப்பா பெயரை சூட்டுவது குறித்து முதலமைச்சருடன் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் வீர புதல்வர், ஃபீல்ட் மார்ஷல் கே.எம்.கரியப்பாவின் சேவையை நினைவுகூறும் வகையில், பெங்களூருவில் வரவிருக்கும் ஒரு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அவரது பெயரை சூட்டுவது பற்றி முதலமைச்சருடன் விரைவில் ஆலோசனை நடைபெறும் என துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். கொடவ சமூகத்தின் பாரம்பரியம் மற்றும் பங்களிப்பைப் பாராட்டும் வகையில், இது அவர்களுக்கு அரசாங்கம் தரும் மரியாதையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொடவ சமாஜம், பெங்களூருவில் நடத்திய விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், “பெங்களூருவின் ஒரு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஃபீல்ட் மார்ஷல் கரியப்பாவின் பெயரை சூட்டுவது குறித்து முதல்வருடன் நான் ஆலோசிக்க உள்ளேன், இது பெருமைக்குரிய விஷயம். இது குறித்து நாங்கள் வெளிப்படையான மனதுடன் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
அதிகாரப்பூர்வமாக 7 ஏக்கர் நிலத்தை அரசுக்கு வழங்கிய கொடவ சமாஜத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சமூகத்தின் பங்களிப்பை அவர் உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்தார். “கொடவ மற்றும் கொடவர் சமூகங்கள் கர்நாடகாவுக்கும், இந்தியாவிற்கும் ஒரு பொக்கிஷம். அவர்களின் சேவை மற்றும் ஈடுபாடு வரலாற்றில் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு, அரசியல், சட்டம், பாதுகாப்பு என பல துறைகளிலும் அவர்கள் தங்களது தனிச்சிறப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும் கொடவர்களின் பங்களிப்பு முக்கியமானது” என்றும் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
மேலும், “நாங்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம். கொடவ சமாஜத்திற்கு வழங்கப்பட்ட நிலத்திற்கு அரசாங்கம் கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது. சமூகத்தின் தியாகங்களை மதித்தே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள சிறிய சமூகங்களுக்கு உதவியது காங்கிரஸ் கட்சியின் அடையாளமாகவே இருந்து வருகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.
“நாங்கள் ஏற்கனவே ராணுவ வீரர்களுக்கு நிலம் வழங்கியுள்ளோம். கொடவர் சமூகத்தை சட்டமன்றம் மற்றும் ராஜ்ய சபாவில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது, அந்த சமூகத்திற்கு நாங்கள் தரும் மதிப்புக்கான அடையாளமாகும்” என்றும் அவர் கூறினார்.
அதே நிகழ்வில், காங்கிரஸ் அரசின் சாதனைகளை எடுத்துரைத்த அவர், “அதிகாரம் தற்காலிகமானதுதான், ஆனால், சாதனைகள் நிரந்தரமானவை. கல்யாண கர்நாடகா மாவட்டத்தில் மக்கள் நமக்குத் தந்த நம்பிக்கையை உயர்த்திக்காட்ட நாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். சுகாதார வசதிகளில் பெங்களூருவுக்குப் பிறகு இந்தப் பகுதி முக்கிய இடம் பிடித்துள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.
Bangalore,Karnataka
June 16, 2025 3:17 PM IST
பெங்களூரு மெட்ரோ நிலையத்திற்கு ஃபீல்ட் மார்ஷல் கரியப்பாவின் பெயர்…! துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உறுதி…


