பெங்களூரு ஆனைக்கல் அருகே பிரபல மதுராம்மா கோவில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
பெங்களூரு நகர் ஆனேக்கல் தாலுகா ஹுஸ்கூர் கிராமத்தில் உள்ள மதுராமா கோவிலில் உள்ளது. இங்கு நடைபெறும் ஆண்டு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்திருந்தனர். திருவிழாவின் ஒரு பகுதியாக, கோயிலுக்கு சொந்தமான 120 அடி உயரம் கொண்ட தேரை பொதுமக்கள் நகர் பகுதிகளில் இழுத்துச் சென்றனர். அப்போது தேர் எதிர்பாராத விதமாக திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
#JUSTIN கர்நாடகாவின் ஹஸ்கரில் மதுரம்மா தேவி கோயில் திருவிழாவில் பிரமாண்டமான தேர் சரிந்து விழுந்து விபத்து – நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை#karnataka #huskur #maddurammadevitemple #festival #News18TamilNadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/FXDF818vnd
— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 6, 2024
பொதுமக்கள் ஏராளமாக கூடியிருந்த நிலையில், தேர் கவிழப்போவதை உணர்ந்த அனைவரும் தப்பி ஓடியதால் எந்தவித உயிர் சேதமோ காயங்களோ ஏற்படவில்லை. தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…