பெங்களூரு: ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு வீதிகளில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர்கள் 11 பேர் கூட்ட் அநெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
நாடெங்கிலும் இந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று(ஜூன் 7) மாலை நடைபெற்றது. விரிவான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின், செய்தியாளர்களுடன் பேசிய கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரகுராம் பாட், கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் செயலர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவரும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளதாகவும், கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் மேலாண்மைக் குழு அவர்களது ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். கர்நாடக அரசால் அமைக்கப்பட்டுள்ள ஒருநபர் விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர், பொருளாளர் ராஜிநாமா!
தார்மீகப் பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகுகிறோம் என செயலர் ஏ. சங்கர், பொருளாளர் இ.எஸ். செய்ராம் தங்களது ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

