• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்தை அரசியலாக வேண்டாம்.. பிசிசிஐ துணைத் தலைவர் கருத்து..

GenevaTimes by GenevaTimes
June 4, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்தை அரசியலாக வேண்டாம்.. பிசிசிஐ துணைத் தலைவர் கருத்து..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 04, 2025 9:55 PM IST

எதிர்பார்த்ததை விட மிக அதிகமானோர் பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது

ராஜிவ் சுக்லாராஜிவ் சுக்லா
ராஜிவ் சுக்லா

பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜுவ் சுக்லா தெரிவித்திருக்கிறார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை முதன்முறையாக வென்றது.

இதையடுத்து இன்று பெங்களூருவில் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும், எதிர்பார்த்ததை விட மிக அதிகமானோர் பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சிலர் ஒருவருடைய தோள் மீது ஏற நேர்ந்தது. இன்னும் சிலர் பதட்டம் காரணமாக வெளியேற முயற்சித்த போது மற்றவர்கள் மீது ஏறி விழுந்தனர்.

இந்த அசம்பாவித சம்பவத்தில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 11 பேர் உயிரிழந்தனர். இருப்பினும், மைதானத்திற்குள் வீரர்களுக்கான பாராட்டு விழா விமரிசையாக நடந்து முடிந்தது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள், மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், பிசிசிஐ தரப்பிலிருந்து முதன்முறையாக அதன் துணைத் தலைவர் ராஜுவ் சுக்லா கருத்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த மாதிரியான அசம்பாவிதம் எந்த மாநிலத்திலும் நடக்கலாம் என்று தெரிவித்த ராஜு சுக்லா, அதற்காக அந்த மாநிலத்தை ஆளும் கட்சியைத் திட்டக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

அசம்பாவிதம் ஏற்படும் என்பதை அறிந்து ரோட் ஷோ நடத்துவதற்கு கர்நாடக அரசு அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்த ராஜு சுக்லா, இன்றைக்கு ஏற்பட்ட நெரிசல் சம்பவம் யாரும் எதிர்பாராதது என்றும் கூறியுள்ளார்.

First Published :

June 04, 2025 9:55 PM IST

Read More

Previous Post

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்… மருத்துவமனை அலட்சியத்தால் சிறுமி மரணமா…?

Next Post

Tamilmirror Online || வாகன இறக்குமதி குறித்த புதிய தகவல்

Next Post
Tamilmirror Online || வாகன இறக்குமதி குறித்த புதிய தகவல்

Tamilmirror Online || வாகன இறக்குமதி குறித்த புதிய தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin