கேரள மாநிலம் திருச்சூரில் ஆண்டுதோறும் பூரம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டும், கடந்த ஏப்ரல் மாதத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் வாணவேடிக்கை நாளும் கொண்டாடப்படுகிறது. அப்படி வாணவேடிக்கைக்கு அடுத்த நாள், இந்த திருவிழாவில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதிக்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. அதே நேரம் ஆம்புலன்ஸ் செல்வதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இருதரப்பு மோதல் குறித்து தகவல் அறிந்த பாஜகவைச் சேர்ந்த சுரேஷ் கோபி மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்வதற்காக அப்பகுதிக்கு ஆம்புலன்ஸில் சென்றுள்ளார். வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால், தடையை மீறி அப்பகுதிக்கு செல்ல ஆம்புலன்ஸை பயன்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, ஆம்புலன்சுகளுக்கு என ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில், விதிகளை மீறி சுரேஷ் கோபி ஆம்புலன்சில் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தாம் எந்த தவறும் செய்யவில்லை என்றும், சில இடங்களில் காவலர்கள் அத்துமீறியதுடன் பாதுகாப்பு விதிமீறல் நடந்ததாகவும் சுரேஷ் கோபி கூறியிருந்தார்.
இது பற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன், காலில் ஏற்பட்ட அசவுகரியத்தின் காரணமாகமே தாம் ஆம்புலன்சில் சென்றதாக தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள் :
தனித்து போட்டி… விஜய் போட்டியிடும் தொகுதி… தவெக செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை?
இந்த நிலையில் 6 மாதங்களுக்குப் பன் மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சராக உள்ள சுரேஷ் கோபி மீது, திருச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், மருத்துவ அவசர தேவைகளுக்கான ஆம்புலன்ஸ், மருத்துவம் அல்லாத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய இணையமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் கேரளா மட்டும் இன்றி, அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
