21 ஆண்டுகளுக்குப் பிறகு சக்திவாய்ந்த சூரிய புயல் நேற்று பூமியைத் தாக்கியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியை தாக்கும் சூரிய புயலால் சாட்டிலைட் மற்றும் மின்சார கட்டமைப்பு பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.
சமீபத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து சமூக வலைதளங்களில் வானில் பல வண்ணங்கள் தோற்றியதுபோல வீடியோக்கள் பரவின. பூமியை தாக்கிய சூரிய புயலால் வானில் ஏற்பட்ட மாற்றங்கள்தான் இவை என விஞ்ஞானிகள் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வரும் நாட்களிலும் சூரிய புயல் பூமியை தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2003ஆம் ஆண்டில் இப்படி ஒரு சக்திவாய்ந்த சூரிய புயல் பூமியை தாக்கிய போது ஸ்வீடன் முழுவதும் மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தென் ஆப்ரிக்காவிலும் மின்சார உள் கட்டமைப்பு சேதமடைந்ததாக சொல்கின்றனர். தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தகைய சக்தி வாய்ந்த சூரிய புயல் பூமியை தாக்கி இருக்கிறது. இம்முறை சூரிய புயலால் அமெரிக்கா அதிக பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சூரிய புயல்கள் பூமியின் காந்தப்புலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் இது குறித்து விமான நிறுவனங்கள், சாட்டிலைட் ஆபரேட்டர்கள் மற்றும் மின் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது அடிக்கடி பூமியை சூரிய புயல் தாக்குவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இனிவரும் நாட்களில் மிகப்பெரிய சூரிய புயல் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் வரலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Also Read |
95 வருடங்களாக இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை… காரணம் என்ன தெரியுமா?
சூரிய புயலுக்கு என்ன காரணம்?
11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரிய சுழற்சி நடைபெறுவது வழக்கம். இந்த சமயத்தில் இதுபோன்ற சூரிய எரிப்புகள், சூரிய புயல்கள் போன்ற செயல்பாடுகள் அதிகரிக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. தற்போதைய சூரிய சுழற்சி கடந்த 2019ஆம் ஆண்டில் 25ஆம் தேதி தொடங்கியது. இந்த சுழற்சி செயல்பாடு 2025ஆம் ஆண்டு உச்சபட்ச நிலையை அடையும் என்று விஞ்ஞானிகள் கணித்திருப்பதால், அடுத்து இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுமா என்ற அச்சம் பரவலாக நிலவுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
