கிரீஸ் நாட்டில் ஒரு தீவில் விமான நிலையம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வந்தன. அடித்தளம் அமைக்க நிலம் தோண்டப்பட்டபோது, திடீரென பூமியில் அடியில் ஒரு விசித்திரமான ஓர் அமைப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த அமைப்பை ஆராய்ச்சி செய்தபோது, அது 4000 ஆண்டுகள் பழமையான அமைப்பு என்பது தெரியவந்துள்ளது. இது பண்டைய கிரேக்க நாகரீகம் தொடர்பான புதிர்களை தீர்க்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பும் நிலையில், இது எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பதை தெரியாமல், குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மிகப்பெரிய சக்கரம் போன்று காட்சியளிக்கும் இந்த அமைப்பு கிமு 2000 முதல் 1700 வரை பயன்படுத்தப்பட்ட மினோவான் நாகரீகத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில், கிரீட்டில் உள்ள நினைவுச்சின்ன அரண்மனையும் இதே காலகட்டத்தில் கட்டப்பட்டதுதான். எனவே, மினோவான் நாகரீகத்துடன் தொடர்புடைய முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கட்டமைப்புகளைப் போலவே, இந்த கட்டமைப்பின் செயல்பாடு என்னவாக இருந்திருக்கும் என்பதை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
ஒரு பெரிய சக்கரம் போல காட்சியளிக்கும் இந்த அமைப்பின் மொத்த பரப்பளவு 19 ஆயிரம் சதுர அடி. கிரேக்க கலாச்சார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த அமைப்பு 157 அடி விட்டம் கொண்டது என்றும், மினோவான் கல்லறைகளைப் போன்று காட்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஏனெனில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அமைப்புக்கு அருகில் பழங்கால விலங்குகளின் எலும்புகளும், எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எனவே, பண்டைய காலத்தில் இந்த இடத்தில் பல்வேறு விதமான சடங்குகள் செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. எனவே, தற்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த இடத்தை ஆய்வு செய்ய தொடங்கியிருப்பதால், விமான நிலையப் பணிகள் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
