தமிழர் தாயக பகுதிகளில் அரசியல் தலைமைகளின் தொடர் கைதுகள் என்பது தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதில், அம்பாறை (Ampara) மற்றும் திருகோவில் போன்ற பிரதேசங்களில் தேடுதல் நடவடிக்கை என்பது மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் தீதிமன்ற அதிகாரிகள் என்பவர்களினால் இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், பிள்ளையான் மற்றும் இனிய பாரதியின் கைதுகளை தொடர்ந்து இடம்பெற்ற கைது நடவடிக்கைகளில் சேகரிக்கப்பட்ட வாக்குமூலங்கள் அடிப்படையில் இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த தொடர் தேடுதல் நடவடிக்கைகளின் பின்னணி, தொடர் அரசியல் கைதுகள், கருணா (Karuna Amman) மற்றும் பிள்ளையானின் (Pillayan) மறைக்கப்பட்ட அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |