• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த அமெரிக்கா, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான்.. டாப் அணிகள் திணறல்

GenevaTimes by GenevaTimes
June 8, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த அமெரிக்கா, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான்.. டாப் அணிகள் திணறல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் அதிக அனுபவம் இல்லாத அமெரிக்கா, ஸ்காட்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தரவரிசை பட்டியலில் தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளன. ஏற்கனவே பல ஆண்டுகளாக விளையாடி அனுபவம் பெற்ற இலங்கை, நியூசிலாந்து நாடுகள் கடைசி இடத்தை பிடித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 55 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

விளம்பரம்

இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தம் 20 நாடுகள் களம் கண்டுள்ளன. ஏ, பி, சி, டி என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி ஏ பிரிவில் உள்ளது. இதில் அமெரிக்கா, கனடா, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

ஏ பிரிவில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள அமெரிக்கா அணி அனைத்திலும் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்திய அணி ஒரு போட்டியில் விளையாடி வெற்றி பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி 4-ஆவது இடத்தில் உள்ளது.

விளம்பரம்

இதேபோன்று பி பிரிவில் ஸ்காட்லாந்து முதலிடத்திலும் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், நமிபியா மூன்றாவது இடத்திலும், இங்கிலாந்து அணி நான்காம் இடத்திலும் உள்ளன.

சி பிரிவில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தை பிடித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து அணி 5ஆம் இடத்திலும் உள்ளன.

டி பிரிவில் முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியும், இரண்டாம் இடத்தில் நெதர்லாந்தும், மூன்றாம் இடத்தில் வங்கதேசமும் உள்ளன. நேபாளம் நான்காம் இடத்திலும், இலங்கை 5-ஆம் இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க – World Cup T20 : இலங்கையை கடைசி இடத்திற்கு தள்ளிய வங்கதேச அணி

விளம்பரம்

இதுவரை 2 போட்டிகளில் விளையாட இலங்கை அணி இரண்டிலும் தோல்வி அடைந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. டி20 கிரிக்கெட் போட்டியில் நீண்ட ஆண்டுகளாக விளையாடி வரும் அணிகள் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிக அனுபவம் இல்லாத அமெரிக்கா, ஸ்காட்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளன. இன்னும் சில போட்டிகள் மீதம் உள்ள நிலையில், தரவரிசையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

.

Read More

Previous Post

காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி தேர்வு | Sonia Gandhi appointed Congress Parliamentary Party chairperson

Next Post

ஊழல், துரோகம் இல்லாவிட்டால் TVETக்கு அதிக நிதி அளிக்க முடியும் – Malaysiakini

Next Post
ஊழல், துரோகம் இல்லாவிட்டால் TVETக்கு அதிக நிதி அளிக்க முடியும் – Malaysiakini

ஊழல், துரோகம் இல்லாவிட்டால் TVETக்கு அதிக நிதி அளிக்க முடியும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin