Last Updated:
சுதாராணி கர்நாடகாவில் 3 திருமணம் செய்து, வீரகவுடா மற்றும் அனந்தமூர்த்தி ஆகியோரிடம் லட்சக்கணக்கில் பணமோசடி செய்ததாக புகார்; போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
கர்நாடகாவில் ஒரு பெண் 3 பேரை காதலித்து திருமணம் செய்து பல லட்சம் ரூபாய் பணமோசடி செய்து விட்டதாக கூறி பாதிக்கப்பட்ட கணவர்கள் காவல்நிலையத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளனர்.
கர்நாடகாவில் அடுத்தடுத்து இரண்டு திருமணங்களை செய்து கணவர்களை கதறவிட்ட இளம்பெண் தற்போது மூன்றாவது நபரை திருமணம் செய்திருக்கிறார். லட்சக்கணக்கில் மோசடி செய்து விட்டதாக முதல் இரண்டு கணவர்களும் புகார் அளித்துள்ளனர். மோசடி பெண் மீது கணவர்கள் கூறும் பகீர் குற்றச்சாட்டுகள் என்ன?.
கர்நாடகா மாநிலம் தொட்டபல்லபூர் தாலுக்கா, முகி கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாராணி. இவர் வீரகவுடா என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களது திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வீரகவுடாவை பிரிந்த அவர், குழந்தைகளையும் விட்டுவிட்டு பிரிந்து சென்று விட்டார். அவரிடம் உறவினர்கள் உள்ளிட்டோர் காரணம் கேட்டபோது, “ஒரு புல்லட் கூட ஓட்டத் தெரியவில்லை. அட்லீஸ்ட் காராவது ஓட்டத் தெரிகிறதா?.. இவர் எல்லாம் ஒரு ஆண்மகனா? என உப்புச்சப்பிலாத காரணங்களைக் கூறி தட்டிக் கழித்ததாகத் தெரிகிறது.
முதல் கணவரைப் பிரித்த சுதாராணி, பெற்ற குழந்தைகளைக் கூட கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அதன்பின் டெலிவரி பாயாக வேலை செய்து வந்த அனந்தமூர்த்தி என்பவரை சந்தித்துள்ளார் சுதாராணி. அவர் பார்க்கும் வேலை என்னவோ டெலிவரி பாய்தான். ஆனால் வங்கிக் கணக்கில் ஏராளமான பணம் வைத்திருந்தது சுதாராணியை ஈர்த்திருக்கிறது. உடனே அனந்தமூர்த்தியுடன் நெருக்கமாக பழகிய அவர், தனது கணவர் உயிரிழந்து விட்டதாகக் கூறி நாடகமாடியிருக்கிறார்.
அந்த கதையை கேட்டு கரைந்துபோன அனந்தமூர்த்தி சுதாராணியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவர் அனந்தமூர்த்தியுடன் சுமார் ஒன்றரை வருடங்களாக வாழ்ந்து வந்தார். இந்த காலகட்டத்தில், பல்வேறு காரணங்களைக் கூறி சுமார் 20 லட்சம் ரூபாய் வரை பணம் பற்றதாகக் கூறப்படுகிறது. போதிய அளவுக்கு பணத்தை பெற்ற பின் அனந்த மூர்த்திக்கு ஒரு முழுக்கு போட்டு விட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறார் சுதாராணி.
எங்கே போனார்? என்ன ஆனார்? என அனந்தமூர்த்தி தவித்துக் கொண்டிருந்த போதுதான், சுதாராணி கனகபுராவைச் சேர்ந்த மற்றொரு நபரை திருமணம் செய்து கொண்ட தகவல் கிடைத்திருக்கிறது. இதை அறிந்ததும், முதல் கணவர் வீரகவுடாவும், இரண்டாவது கணவர் அனந்தமூர்த்தியும் சேர்ந்து தொட்டபல்லபுரா காவல் நிலையத்திற்கு சென்று தங்களுக்கு நீதி வேண்டும் என புகார் கொடுத்துள்ளனர். சுதாராணி பணத்திற்காக மட்டுமே பழகி திருமணம் செய்துகொண்டு மோசடியை அரங்கேற்றுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து தொட்டபல்லாபூர் போலீசார் புகாரை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“புல்லட், கார் ஓட்டத் தெரில..” முதல் கணவனை பிரிந்த மனைவி.. அடுத்தடுத்து இரண்டு திருமணங்கள்.. அதிரவைக்கும் பின்னணி!


