அமெரிக்க அரசு, வெளிநாட்டினரை குடியேற்றுவது தொடர்பான அனைத்து முடிவுகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து எடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அமெரிக்கப் படையினர் ஆப்கானிஸ்தானில் இருந்தபோது அவர்களுக்கு உதவி செய்த ஆப்கானியர்களுக்கு வழங்கப்படும் நுழைவு விசாக்களும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க குடியேற்ற சேவைகளின் இயக்குநர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “ஒவ்வொரு குடியேற்ற விண்ணப்பதாரரும் முழுமையான பாதுகாப்பு மற்றும் பின்னணி சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் வரை, அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கலாமா இல்லையா என்பதை முடிவு செய்யும் செயல்முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு நிரந்தர தடை விதிக்கப்போவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

