• Login
Sunday, August 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

புருனே சென்ற பிரதமர் மோடி – இந்திய தூதரக அலுவலகத்தை திறந்துவைத்தார்! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
September 4, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
புருனே சென்ற பிரதமர் மோடி – இந்திய தூதரக அலுவலகத்தை திறந்துவைத்தார்! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அரசு முறைப்பயணமாக புருனே சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டில் இந்திய தூதரகத்தின் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

இந்தியா-புருனே இடையேயான நட்புறவு தொடங்கி 40 ஆண்டுகள் ஆனதை ஒட்டி இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அந்நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அவரை புருனே இளவரசர் ஹாஜி அல்-முஹ்ததீ பில்லா விமான நிலையம் சென்று வரவேற்றார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ராணுவ வீரர்களின் அணிவகுப்புடன் கூடிய சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியுடன் கை குலுக்கியும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.

விளம்பரம்

இதனைத் தொடர்ந்து, புருனே தருசலாமில் உள்ள இந்திய தூதரகத்தின் புதிய அலுவலகத்தை பிரதமர் மோடி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். பின்னர் அந்நாட்டின் பாரம்பரியான ஓமர் அலி சைஃபூதின் மசூதியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இன்று இரண்டாவது நாளில் புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை மோடி சந்திக்க உள்ளார். உலகின் மிகப்பெரிய அரண்மனையான இஸ்தானா நூருல் இமான் அரண்மனையில் இவர்களின் சந்திப்பு நடக்கவுள்ளது.

5 நீச்சல் குளங்கள், 1,700 படுக்கையறைகள், 257 குளியல் அறைகள் மற்றும் 110 கார் கேரேஜ்கள் என்று உலகின் மிகப்பெரிய அரண்மனையாக இஸ்தானா நூருல் இமான் அரண்மனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

விளம்பரம்

புருனே சுல்தானுக்குச் சொந்தமான இந்த அரண்மனையில் பிரதமர் மோடிக்கு சுல்தான் ஹாஜி ஹசனல் மதிய விருந்து அளிக்கிறார். பிரதமர் மோடியும் புருனே சுல்தானும் முதன்முறையாக 2014 நவம்பரில் நடந்த 25வது ஆசியான் உச்சி மாநாட்டில் சந்தித்தனர், அதன்பின் 2017-ம் ஆண்டு மணிலாவில் நடைபெற்ற கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிலும் சந்தித்துக் கொண்டனர்.

Also Read:
7,000 ஆடம்பர கார்கள், பணக்கார மன்னர் – மோடியை வரவேற்கும் புருனே சுல்தான் பற்றி தெரியுமா?

முன்னதாக இன்று காலை பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, எரிசக்தி, விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் வகையில் இருதரப்பு விவாதங்களில் பிரதமர் கலந்துகொள்ள உள்ளார். அப்போது இரு நாடுகளும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

புருனே பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி சிங்கப்பூர் செல்கிறார்.

.

Read More

Previous Post

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த விபத்தில் தமிழக பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு | 4 Indians dead in fiery multi-vehicle crash in Texas

Next Post

Tamil News Live Today: America: "மாலையின் அமைதியும்… புதிய கனவுகளும்…!" – ஸ்மார்ட் சைக்கிளில் முதல்வர் ஸ்டாலின்

Next Post
Tamil News Live Today: America: "மாலையின் அமைதியும்… புதிய கனவுகளும்…!" – ஸ்மார்ட் சைக்கிளில் முதல்வர் ஸ்டாலின்

Tamil News Live Today: America: "மாலையின் அமைதியும்... புதிய கனவுகளும்...!" - ஸ்மார்ட் சைக்கிளில் முதல்வர் ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin