• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

புயல் வேக பேட்டிங்கால் கிரிக்கெட் உலகை புரட்டி போட்ட வைபவ் சூர்யவன்ஷி | Vaibhav Suryavanshi breaks record for youngest IPL debutant at 14

GenevaTimes by GenevaTimes
April 30, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
புயல் வேக பேட்டிங்கால் கிரிக்கெட் உலகை புரட்டி போட்ட வைபவ் சூர்யவன்ஷி | Vaibhav Suryavanshi breaks record for youngest IPL debutant at 14
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் ராஜஸ்​தான் ராயல்​ஸின் இளம் புய​லான வைபவ் சூர்​ய​வன்ஷி நேற்று முன்​தினம் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணிக்கு எதி​ராக 38 பந்​துகளில் 7 பவுண்​டரி​கள், 11 சிக்​ஸர்​களு​டன் 101 ரன்​களை விளாசி மிரளச் செய்​தார். அவரது புயல் வேக ஆட்​டத்​தால் 210 ரன்​கள் இலக்கை 15.5 ஓவர்​களி​லேயே எட்டி வெற்றி பெற்​றது ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி.

14 வயதான வைபவ் சூர்​ய​வன்ஷி பிஹார் மாநில தலைநக​ரான பாட்​னா​விலிருந்து 100 கிலோமீட்​டர் தொலை​விலுள்ள சமஸ்​திபூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர். 8-ம் வகுப்பு படித்து வரு​கிறார். இந்த ஆண்டு ஜனவரி​யில் முதல்தர கிரிக்​கெட் போட்​டி​யில் வலு​வான மும்பை அணிக்கு எதி​ராக களமிறங்​கி​னார்.

யு-19 இந்​திய அணிக்​காக​வும் சூர்​ய​வன்ஷி விளை​யாடி உள்​ளார். கடந்த சில மாதங்​களுக்கு முன்​னர் ஆஸ்​ரேலியா ஏ அணிக்கு எதி​ராக சென்னை சேப்​பாக்​கத்​தில் நடை​பெற்ற 4 நாட்​கள் ஆட்​டத்​தில் சூர்​ய​வன்ஷி 58 பந்​துகளில் சதம் விளாசி அனை​வரை​யும் திரும்பி பார்க்க வைத்​திருந்​தார்.

கடந்த ஆண்டு நடை​பெற்ற ஏலத்​தின் போது ராஜஸ்​தான் அணி சூர்​ய​வன்​ஷியை ரூ.1.10 கோடிக்கு ஏலம் எடுத்​தது. அவரது அடிப்​படை விலை ரூ.30 லட்​ச​மாக இருந்த நிலை​யில் ராஜஸ்​தான் அணி நிதியை பொருட்​படுத்​தாமல் சூர்​யவன்​ஷி​யி​ன் திறமைக்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்து வாங்​கியது. சஞ்சு சாம்​சன் காயம் அடைந்​த​தால் சூர்​ய​வன்​ஷிக்கு ராஜஸ்​தான் அணி​யின் லெவனில் வாய்ப்பு கிடைத்​தது.

இளம்​கன்று பயம் அறி​யாது என்​பதை போல லக்னோ அணிக்கு எதி​ராக அறி​முக​மான முதல் ஆட்​டத்​திலேயே அனை​வரது பார்​வையை​யும் தன் பக்​கம் இழுத்​தார். எதிர்​கொண்ட முதல் பந்​தையே சிக்​ஸருக்கு பறக்​க​விட்டு மிரட்​டி​னார். அந்த ஆட்​டத்​தில் 20 பந்​துகளில் 34 ரன்​கள் விளாசிய நிலை​யில் ஆட்​ட​மிழந்​தார். கிடைத்த வாய்ப்பை சரி​யாக பயன்​படுத்​திக் கொள்​ளாமல் விட்​டு​விட்​டோமே என மனம்​வருந்​திய அவர், அழுத​படியே மைதானத்​தில் இருந்து வெளி​யேறி​னார்.

ஆனால் தற்​போது தனது 3-வது ஆட்​டத்​திலேயே அதிரடி​யாக சதம் விளாசி, உலக அரங்​கையை அதிரச் செய்​துள்​ளார் வைபவ் சூர்​ய​வன்​ஷி. குஜ​ராத் அணிக்குஎதி​ரான ஆட்​டத்​தில் நேற்று முன்​தினம் அவர், 35 பந்​துகளில் சதம் விளாசி ஐபிஎல் வரலாற்​றில் குறைந்த பந்​துகளில் சதம் விளாசிய இந்​திய வீரர் என்ற பெரு​மை​யை​யும், ஒட்​டுமொத்​த​மாக பட்​டியலில் 2-வது வீரர்என்ற சாதனையை​யும் பெற்​றுள்​ளார்.

சூயர்​வன்ஷி 11 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​கள் விளாசி​னார். அவர், குவித்த 101 ரன்​களில் 94 ரன்​கள் பவுண்​டரி​கள் மற்​றும் சிக்​ஸர்​கள் வாயி​லாக கிடைக்​கப்​பெற்​ற​தாகும். ஒவ்​வொரு வீரரும் கிரிக்​கெட்​டில் சாதனை படைக்க வேண்​டும் என கனவு காணும் வயதில் அதை சாத்​தி​யப்​படுத்தி பிரமிக்க வைத்​துள்​ளார் சூர்​ய​வன்​ஷி. அவரது டெக்​னிக், பந்​து​வீச்சை அடித்து நொறுக்​கும் விதம், மட்​டை​யின் வேகம், பயமில்​லாத அணுகு​முறை, முதல் பந்​திலேயே சிக்​ஸர் விளாசும் திறன் ஆகிய​வற்​றுடன் அவரது மனநிலை​யும் தனித்து நிற்​கிறது. இது அதிர்​ஷ்டத்​தால் வசமானது என்று கூற​முடி​யாது. 14 வயதில் அவர், தன் மீதும், தனது திறமை, திறன்​கள் மீது வைத்​துள்ள அசைக்க முடி​யாத நம்​பிக்​கை​யால் சாத்​தி​ய​மாகி உள்​ளது.

இஷாந்த் சர்​மா, முகமது சிராஜ் மற்​றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய சிறந்த பந்​து​வீச்​சாளர்​களை மிரள வைத்​துள்​ளார் சூர்​ய​வன்​ஷி. பெரும்​பாலும் லெக் திசையை குறித்து தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொண்​டாலும் ஆஃப்​-சைடிலும் சில நம்​ப​முடி​யாத ஷாட்​களை விளை​யாடி​னார். இந்​திய அணிக்கு எதி​ராக 100 டெஸ்ட் போட்​டிகள், 80 ஒரு​நாள் போட்டி மற்​றும் ஐபிஎல் தொடரில் 7 அணி​களுக்​காக 116 ஆட்​டங்​களில் விளை​யாடிய அனுபவம் கொண்ட இஷாந்த் சர்​மாவுக்கு எதி​ராக (4-வது ஓவர்) சூர்​ய​வன்ஷி மட்​டையை சுழற்​றிய விதம் அபார​மானது.

3 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​கள் என புரட்​டி​யெடுத்த சூர்​ய​வன்​ஷி. டி 20 போட்​டிகளில் சிக்​க​ன​மாக வீசக்​கூடிய வாஷிங்​டன் சுந்​தரை​யும் விட்​டு​வைக்​க​வில்​லை. அவரது ஓவரிலும் 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி என தெறிக்​க​விட்​டார். தொடர் முழு​வதும் சீராக வீசி பந்த பிரசித் கிருஷ்ணாவை​யும் பதம்​பார்த்​தார். அத்​துடன் அறி​முக வீர​ரான ஜனம் கரிம் வீசிய ஓவரில் 3 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன்30 ரன்​கள் வேட்​டை​யாடி குஜ​ராத் அணியை அதிர்ச்​சி​யில் உறைய வைத்​தார்.

16 வயதில் சச்​சின் டெண்​டுல்​கர் நாட்​டிற்​காக விளை​யாடு​வதற்கு முன்பு ரஞ்சி டிராபி, துலீப் டிராபி போன்ற கடின​மான போட்டிகளை கடந்​தார். 17 வயதில் பார்த்​திவ் படேல் முதல் தர கிரிக்​கெட் அனுபவம் இல்​லாமல் வந்து இந்​தி​யா​வுக்​காக ஒரு டெஸ்ட் போட்​டி​யில் சிறப்​பாக விளை​யாடி தோல்​வி​யில் இருந்து காப்​பாற்றி கொடுத்​தார். ஆனால் 14 வயதில் அதி​லும் அதிக திறனும், டெக்​னிக்​கும் தேவைப்​படும் டி 20-ல் புதிய நாயக​னாக உரு​வெடுத்​துள்​ளார் வைபவ் சூர்​ய​வன்​ஷி.

எம்​.எஸ்​.தோனி​யின் வருகை சிறிய நகரங்​களைச் சேர்ந்த இளம் வீரர்​களிடையே நம்​பிக்​கையை அதி​கரித்​தது. தற்​போது சூர்​ய​வன்​ஷி​யின் ஆட்​டம் இந்​தியா முழு​வதும் உள்ள ஒவ்​வொரு 14-15 வயது சிறு​வர்​களும் தங்​களது கிரிக்​கெட் பயணத்தை எவ்​வாறு கட்​டமைக்க முடி​யும் என்​ப​தற்கு முன்​னு​தா​ரண​மாக அமையக்​கூடும். எதிர்​காலத்​தில்​ இந்​தி​யா​வில்​ கிரிக்​கெட்​ இனி பழமை​வாதத்​துடன்​ இருக்​காது வேறு பாணி​யை நோக்​கி பயணிக்​கக்​கூடும்​ என்​றே கருதப்​படுகிறது.

சச்சினுடன் ஒப்பிடக்கூடாது: வைபவ் சூர்யவன்ஷி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறும்போது, ‘‘ஐபிஎல் போட்டியில், திறமையான பந்துவீச்சுத் தாக்குதலுக்கு எதிராக வைபவ் செய்த சாதனை மிகப்பெரியது. அவர் திறமைவாய்ந்த பேட்ஸ்மேன். இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் நீண்ட காலம் விளையாட முடியும். அவரது திறமையை கவனித்து வருகிறோம். பந்தை சரியாக கவனித்து அதை மிகவும்

வேகமாக விளாசுவது அவரது சிறப்பு. அவரதுகிரிக்கெட் தொழில்நுட்பம் சிறப்பாக உள்ளது. அதேநேரத்தில் 16 வயதில் அறிமுகமான இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் வைபவ் சூர்யவன்ஷியை ஒப்பிடுவது நியாயமற்றது. இவ்வளவு சீக்கிரம், சச்சினுடன் வைபவை நாம் ஒப்பிடக்கூடாது. அவர் இப்போதுதான் வளர்ந்து வரும் வீரர்’’ என்றார்.

பாராட்டு மழை:

சச்சின் டெண்டுல்கர்: அச்சமற்ற அணுகுமுறை, பேட்டிங் வேகம், பந்தின் லென்ந்த்தை விரைவாக அடையாளம் காணும் திறன், பந்தின் பின்னால் ஆற்றலை மாற்றுவது ஆகியவை அற்புதமான வைபவ் சூர்யவன்ஷியின் இன்னிங்ஸ் பின்னால் உள்ளது. 38 பந்துகளில் 101 ரன்கள். அற்புதமாக விளையாடினீர்கள்.

பிரையன் லாரா: நான் மகிழ்வித்தேனா? நீங்கள் நிச்சயமாக என்னை மகிழ்வித்தீர்கள்.

யூசுப் பதான்: ஐபிஎல் தொடரில் இந்தியர் ஒருவரின் அதிவேக ஐபிஎல் சதமாக இருந்த எனது சாதனையை முறியடித்த இளம் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாழ்த்துக்கள். என்னைப் போலவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும்போது இது நடப்பதைப் பார்ப்பது இன்னும் சிறப்பு. இளம் வீரர்களுக்கு இந்த அணியில் உண்மையிலேயே ஏதோ மாயாஜாலம் இருக்கிறது. போக வேண்டிய தூரம் அதிகம், சாம்பியன்.

இயன் பிஷப்: 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 2025-ம் ஆண்டில் 35 பந்துகளில் ஐபிஎல் சதத்தை அடித்து நொறுக்கியுள்ளார். வியப்பூட்டுகிறது. யுவராஜ் சிங்: 14 வயதில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இந்த குழந்தை உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களை கண் இமைக்காமல் எதிர்கொள்கிறது. வைபவ் சூர்யவன்ஷி பெயரை நினைவில் கொள்ள வேண்டும். அச்சமற்ற அணுகுமுறையுடன் விளையாடுகிறார். அடுத்த தலைமுறை ஒளிர்வதைக் காண்பது பெருமையாக உள்ளது.

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்: இந்தியா புதிய ஸ்டாரை கண்டுபிடித்துவிட்டது. 14 வயதில், பெரும்பாலான குழந்தைகள் கனவு காண்கிறார்கள், ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்கள். வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாக கருதப்படும் குஜராத் அணிக்கு எதிராக அற்புதமாக சதம் விளாசியுள்ளார். வயதுக்கு மீறிய நிதானம், தரம், தைரியம் அவரிடம் உள்ளது.

ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். பிஹாரைச் சேர்ந்த 14 வயதான அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அவரது திறனை பாராட்டியுள்ள பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ரூ.10 லட்சம் ஊக்கத் தொகையை அறிவித்துள்ளார்.

‘6 பந்தில் ஐபிஎல் ஒப்பந்தம்’ – ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரோமி பிந்தர் கூறும்போது, ”வீரர்கள் தேர்வில் முதல் ஓவரிலேயே சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்த்த பிறகு பயிற்சியாளர் ராகுல் திராவிட், உயர் செயல்திறன் இயக்குநர் ஜுபின் பருச்சா, பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோர் இந்த சிறுவனிடம் அற்புதமான திறமை உள்ளதை ஒப்புக்கொண்டனர். அதிர்ஷ்டவசமாக, நாங்கள் அவரை ஏலத்தில் எடுத்தோம். ஏலத்திற்குப் பிறகு, அவர் நாக்பூரில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸின் உயர் செயல்திறன் மையத்தில் எங்களுடன் மூன்று மாதங்கள் செலவிட்டார், அங்கு அவர் மிகவும் கடினமாக உழைத்தார்.

நாக்பூர் உயர் செயல்திறன் மையத்தில் சூர்யவன்ஷி முதல் ஓவரை விளையாடிய விதத்தில் இருந்து அவரிடம் உள்ள திறமையை அறிந்தோம். அங்கிருந்துதான் ராகுல் திராவிட்டும், ஜுபினும் என்னை அழைத்து, சூர்யவன்ஷியின் மீது ஒரு கண் வைத்திருக்கும்படியும், அவரது பெற்றோருடன் பேசும்படியும் கூறினார்கள்” என்றார்.



Read More

Previous Post

ஆந்திராவில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு, பலர் காயம் | seven killed in wall collapse at temple in Andhra Pradesh Simhachalam

Next Post

நிச்சயமற்ற காலங்களில் தங்கத்தில் முதலீடு பாதுகாப்பானதாகக் கருதப்படுவதற்கான காரணம் தெரியுமா?

Next Post
நிச்சயமற்ற காலங்களில் தங்கத்தில் முதலீடு பாதுகாப்பானதாகக் கருதப்படுவதற்கான காரணம் தெரியுமா?

நிச்சயமற்ற காலங்களில் தங்கத்தில் முதலீடு பாதுகாப்பானதாகக் கருதப்படுவதற்கான காரணம் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin