Last Updated:
இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லீட்ஸ் மைதானத்தில் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடைபெற்றது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. இதில் விளையாடும் இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும் முனைப்பில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த போட்டியில் அனைத்து வீரர்களுமே ஓரளவு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் சுமாராக விளையாடினார். இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜூலை 2-ஆம் தேதி பார்மிங்ஹாமில் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியிருந்தார். முதல் டெஸ்ட்டில் மட்டும் அவர் சுமார் 44 ஓவர்கள் வரை வீசியுள்ளார்.
ஏற்கனவே அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு அதிலிருந்து மைதானத்துக்கு திரும்பி உள்ள நிலையில் அவருக்கு போதுமான ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் போட்டி நடைபெறும் பார்மிங்ஹாம் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுவதால் இந்திய அணி ரவீந்திர ஜடேஜா உடன் கூடுதலாக குல்தீப் யாதவை களமிறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நம்பர் ஒன் பந்துவீச்சாளரான பும்ரா அடுத்த போட்டியில் இடம் பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.
June 27, 2025 4:25 PM IST


