• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பும்ராவை எதிர்கொள்ள தயாராக இருங்கள்: கிரேம் ஸ்மித் அறிவுரை | Graeme Smith Advice South African Cricketers over Facing Bumrah

GenevaTimes by GenevaTimes
November 13, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
பும்ராவை எதிர்கொள்ள தயாராக இருங்கள்: கிரேம் ஸ்மித் அறிவுரை | Graeme Smith Advice South African Cricketers over Facing Bumrah
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: இந்தியா – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையே 2 ஆட்​டங்​கள் கொண்ட டெஸ்ட் கிரிக்​கெட் தொடர் நடை​பெற உள்​ளது. இதன் முதல் போட்டி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நாளை (14ம் தேதி) தொடங்​கு​கிறது.

இந்​நிலை​யில் எஸ்​ஏ 20 கிரிக்​கெட் தொடர்​பான நிகழ்ச்சி மும்​பை​யில் நடை​பெற்​றது. இதில் இந்​தத் தொடரின் கமிஷனரும், தென் ஆப்​பிரிக்க அணி​யின் முன்​னாள் கேப்​ட​னு​மான கிரேம் ஸ்மித் பங்​கேற்​றார். அப்​போது அவர், கூறிய​தாவது: துணைக்​ கண்ட ஆடு​களங்​களில் சுழற்​பந்து வீச்சை எதிர்​கொள்​வதற்கு முன்​னரே வேகப்​பந்து வீச்​சுக்கு எதி​ராக விக்​கெட்​களை இழக்க யாரும் விரும்ப மாட்டார்​கள். இந்​தி​யா​வுக்கு எதி​ரான டெஸ்ட் தொடரில் தென்​ ஆப்​பிரிக்க அணி சுழற்பந்து வீச்சை கையாள்​வதற்​கான உத்​தி​களை வகுக்​கும் முயற்​சி​யில் ஈடு​படும் என்று நான் நம்​பு​கிறேன்.

மேலும் பேட்​டிங்கை வலு​வாக தொடங்க வேண்​டும். டாப் 3 வீரர்​கள் சிறந்த அடித்​தளம் அமைத்​துக் கொடுக்க வேண்​டும். தொடக்​கத்​தில் 2 அல்​லது 3 விக்​கெட்​களை இழந்​து​விட்​டால் அதை​விட மோச​மான விஷ​யம் வேறு ஏதும் இருக்​காது. இது நிகழ்ந்​தால் அதன் பின்​னர் சுழற்பந்து வீச்​சாளர்​கள் ஆதிக்​கம் செலுத்​தும் போது நாம் போராட வேண்​டும். தொடக்​கத்​தில் ஜஸ்​பிரீத் பும்​ராவை எதிர்​கொள்​வது பெரிய விஷய​மாக இருக்​கும். இதே​போன்று இந்​திய அணிக்கு எதி​ராக காகிசோ ரபாடா இருப்​பார். இவர்​கள் இரு​வருமே உலகத்​தரம் வாய்ந்த டெஸ்ட் சாதனை​களை கொண்​டுள்ள பந்​து​ வீச்​சாளர்​கள். துணைக்​ கண்ட ஆடு​களங்​கள் ரபா​டாவுக்கு பெரிய சவாலாக இருக்​கும்.

தென் ஆப்​பிரிக்க அணி​யின் பந்​து​வீச்சு தாக்​குதலுக்கு அவர், நிச்​ச​யம் தலை​மை வகிப்​பார். அவர், புதிய பந்​தில் சிறப்​பான தொடக்​கம் அமைத்து கொடுப்​பது தெம்பா பவுமா தலை​மையி​லான அணிக்கு முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக அமை​யும். தென் ஆப்​பிரிக்க அணி​யில் உள்ள பல வீரர்​கள் இந்​தியா ‘ஏ’ அணிக்கு எதி​ரான ஆட்​டங்​களி​லும், பாகிஸ்​தான் டெஸ்ட் தொடரிலும் விளை​யாடி உள்​ளார்​கள். ஆடு​களத்​தின் சூழ்​நிலையை தகவ​மைத்​துக் கொண்டு விளை​யாட வேண்​டும். இங்கு விளை​யாடு​வதற்கு அந்த சிந்​தனை முக்​கி​யம். முதல் போட்டி நடை​பெறும் கொல்​கத்தா ஆடு​களம் பொது​வாக ரன் குவிக்க சிறந்த இடம்.

இதனால் ரன்​களுக்​கான மதிப்பை பெற முடி​யும். தென் ஆப்​பிரிக்க அணி சிறந்த பந்​து​வீச்சு தாக்​குதலுடன் இந்​தியா வந்​துள்​ளது. முக்​கிய​மாக சுழற் ​பந்​து​வீச்​சில் கேசவ் மஹா​ராஜ், சைமன் ஹார்​மர் ஆகியோர் நிச்​ச​யம் சேதத்தை ஏற்​படுத்த முடி​யும். அவர்​களால் ஆட்​டத்தை கட்​டுப்​படுத்த முடி​யும், மேலும் விக்​கெட்​களை கைப்​பற்​றக்​கூடிய அளவுக்கு அவர்​கள் பந்தை சுழற்ற முடி​யும். மேலும் ரபாடா ரிவர்​ஸ் ஸ்விங்கை எவ்​வாறு கையாளுகிறார் என்​ப​தை​யும்​ பார்க்​க வேண்​டும்​” இவ்​வாறு கிரேம்​ ஸ்​மித்​ கூறி​னார்​.



Read More

Previous Post

Bihar Election Result : ஒருமுறை கூட போட்டியிடவில்லை.. 20 ஆண்டுகள் பிகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் கோலோச்சியது எப்படி? | இந்தியா

Next Post

உலகின் முதல் ரொக்க பணப் பரிவர்த்தனையில்லா நாடு எது தெரியுமா…?

Next Post
உலகின் முதல் ரொக்க பணப் பரிவர்த்தனையில்லா நாடு எது தெரியுமா…?

உலகின் முதல் ரொக்க பணப் பரிவர்த்தனையில்லா நாடு எது தெரியுமா...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin