30
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை நேற்று காலை நடைபெற்றதுடன், இதில் பெருமளவானோர் கலந்துகொண்டனர். பள்ளிவாசல் தலைவர் தாஹிர் றசீன் மற்றும் பொதுச் செயலாளர் பாரிஸ் ஹாஜி உட்பட நிர்வாக உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இப்பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதன்போது விசேட தூஆ பிரார்த்தனையை பள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி அல் ஹாபிழ் றிஸ்வான் பஹ்ஜி நிகழ்த்தினார்.
(படங்கள்:-கொழும்பு
தினகரன் நிருபர்)

