• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

புத்ராஜெயா IOI சிட்டி மாலில் 2026 ‘HASIL’ மாதம் கோலாகலத் தொடக்கம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
புத்ராஜெயா IOI சிட்டி மாலில் 2026 ‘HASIL’ மாதம் கோலாகலத் தொடக்கம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரகாஷ் வேலு,

புத்ராஜெயா, அக். 2- மலேசிய உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் (LHDN / HASiL) சார்பில் 2026ஆம் ஆண்டுக்கான “HASiL மாதம் 2026′ (Bulan HASiL 2026) தொடக்க விழா, புத்ராஜெயா IOI சிட்டி மாலில் மிகவும் கோலாகலமாக நேற்று (அக்டோபர் 1, 2026) காலை 11.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. மலேசிய உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO), டத்தோ டாக்டர் அபு தாரிக் ஜமாலுடின் (YBhg. Datuk Dr. Abu Tariq Jamaluddin) இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

                                                                       

‘HASiL மாதம்’ என பெயர் மாற்றம்: ஒரு புதிய பரிமாணம்!

விழாவில் உரையாற்றிய டத்தோ டாக்டர் அபு தாரிக் ஜமாலுடின், இதற்கு முன்பு ‘வரி கல்வி மாதம்’, (Tax Education Month) என்று அழைக்கப்பட்டு வந்த இத்திட்டம், இந்த ஆண்டுமுதல் “HASiL மாதம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த மாற்றம் வெறும் பெயரளவிலான மாற்றம் அல்ல என்றும் பொதுமக்களுக்கு வரி குறித்த விழிப்புணர்வை வழங்குவதோடு நின்றுவிடாமல், வரி செலுத்துவோருக்கு வழிகாட்டுவதற்கும் அவர்களது தவறு களைத் திருத்திக் கொள்ள உதவுவதற்கும் HASiL தோழமையோடு செயல்படும் என்பதை இது பிரதிபலிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2026ஆம் ஆண்டின் கருப்பொருள்: சுயமாக அறிவிப்போம், கூட்டுப் பொறுப்பு!

நடப்பாண்டுக்கான HASiL மாதமானது சுயமாக அறிவிப்போம், இது கூட்டுப் பொறுப்பு (Lapor Sukarela, Tanggungjawab Bersama) என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகிறது. வரி செலுத்துவோர் தங்கள் வரி நிலவரங்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின், HASiL அதிகாரிகள் கண்டுபிடிக்கும் வரை காத்திருக்காமல், தாமாக முன்வந்து சுயமாகத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், நியாயமான வரி முறையை உருவாக்குவது என்பது அரசின் பொறுப்பு மட்டுமல்லாமல், நாட்டு மக்கள் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

                                                             

 “அதுமட்டுமின்றி, மக்களைத் தேடிச் செல்லும் ‘HASiL எழுத்தறிவுப் பயணம்’, வழக்கமாக பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து கிளை அலுவலகங்களுக்குச் சென்று வரிகளைச் செலுத்தும் முறைக்கு மாறாக, இம்முறை ‘HASiL எழுத்தறிவுப் பயணம்’ (Jelajah Literasi HASiL) என்ற புதிய திட்டத்தின் கீழ், அக்டோபர் மாதம் முழுவதும் நாட்டின் 15 மாநிலங்கள், மேலும் 4 சிறப்புக் கிளைகளைச் சேர்ந்த அதிகாரிகள் நேரடியாக வணிக வளாகங்கள், வர்த்தக நிலையங்கள், கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பொதுமக்களைச் சந்திக்கவுள்ளனர்.

HASiL உங்களிடம் வருவதற்காகக் காத்திருக்காது – இந்த முறை, நாங்களே உங்களைத் தேடி வருகிறோம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் இப்பயணம் அமையும் என டத்தோ டாக்டர் அபு தாரிக் தெரிவித்தார்.

சிறப்பு ஒப்புதல் திட்டங்களும், வரி தப்பித்தல் புகாரளிப்பும், வரி செலுத்துவோர் எவ்வித அச்சமும் இன்றி தங்களது வரி நிலவரங்களை சரிசெய்து கொள்ள ஏதுவாக, PKPS e-Invois, PKPS Duti Setem (முத்திரை வரி சிறப்புத் திட்டம்), வருமான வரி சுய ஒப்புதல் பிரச்சாரம் போன்ற சிறப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார. இதனிடையே, வரி ஏய்ப்பு தொடர்பான முறைகேடுகளைப் பொதுமக்கள் எவ்வித பயமின்றி ஆன்லைன் மூலமாக, e-Pelarian Cukai தளம் வழியாகப் புகாரளிக்கலாம் என்றும், தகவல் அளிப்போரின் ரகசியத்தன்மை கடுமையாகப் பேணப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். விழாவின் நிறைவில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கும் வகையில் அனைவரும் வரிவிதிப்பு முறைகளில் முழுமையான ஒத்துழைப்பை நல்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.



Read More

Previous Post

தலதா மாளிகை உள்ளிட்ட விகாரைகளுக்கு வட்ஸ்அப்பில் குண்டு மிரட்டல் – 21 வயது இளைஞன் விளக்கமறியலில்! – Sri Lanka Tamil News

Next Post

உணவு, எரிபொருளின்றி தவிக்கும் ஈரானியக் கப்பல்கள்

Next Post
உணவு, எரிபொருளின்றி தவிக்கும் ஈரானியக் கப்பல்கள்

உணவு, எரிபொருளின்றி தவிக்கும் ஈரானியக் கப்பல்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin