Last Updated:
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
உச்ச நீதிமன்றத்தின் 52 ஆவது தலைமை நீதிபதியாக கடந்த மே 14 ஆம் தேதி பி.ஆர்.கவாய் பதவி ஏற்றுக் கொண்டார். வரும் திங்கட்கிழமை அவர் 65 வயதை எட்டும் நிலையில், அலுவல் நாளான இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
இதனை ஒட்டி, டெல்லியில் நேற்று நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், தான் புத்த மதத்தைப் பின்பற்றினாலும், மதச்சார்பற்றவர் என்று கூறினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்ற பி.ஆர்.கவாய், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என்ற உத்தரவு மற்றும் தேர்தல் பத்திரத் திட்டங்கள் ரத்து உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
மேலும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த, அரசியல் சாசன அமர்வுக்கும் பி.ஆர்.கவாய் தலைமை தாங்கினார். அவர் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் 53 ஆவது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் வரும் திங்கட்கிழமை பொறுப்பேற்க உள்ளார்.
November 21, 2025 9:46 PM IST
“புத்த மதத்தைப் பின்பற்றினாலும் நான் மதச்சார்பற்றவர்..” – பிரிவு உபசார விழாவில் நீதிபதி பி.ஆர். கவாய் பேச்சு


