புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு துறைகளில் இந்தியாவை உலகளாவிய மையமாக மாற்றுவதே எங்கள் இலக்கு என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் நடைபெற்ற வருடாந்த வர்த்தக மாநாட்டில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர்,
‘இது அறிவுப் பொருளாதாரத்தின் சகாப்தம். அதனால் இந்தியாவின் திறன்களும் திறமைகளின் பங்கும் மீள்மதிப்பீடு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எமது தொழில்நுட்ப முன்னேற்றத்தின் தன்மை அதிக தேவையை உருவாக்கியுள்ளது.
அதேநேரம், அபிவிருந்தியடைந்த நாடுகளில் சனத்தொகை பற்றாக்குறையும் காணப்படவே செய்கிறது. ஆனால் உலகளாவிய ரீதியில் தொழில் புரியக்கூடிய இடங்கள் விரிவடைந்து வருகிறது.
அதன் காரணத்தினால் வெளிநாடுகளில் உள்ள எமது குடிமக்களை பாதுகாப்பதற்கான பொறுப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் வாழ்க்கை வசதிகளின் மேம்பாட்டுக்காக தொழில்நுட்பத்தை நாம் பரவலாகப் பயன்படுத்துகின்றோம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

