புதையல் பொருட்களை பெறுவதற்காக சட்டவிரோத அகழ்வு பணிகளில் ஈடுபட்ட 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி கனகபுரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (21) நடத்திய சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22, 25, 37, வயதுடைய கெலன்பிந்துவெவ, வவுனியா, பலாங்கொடை மற்றும் வெயாங்கொடை பகுதிகளை வசிப்பிடமாக கொண்ட சந்தேக நபர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
|
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

