புத்தாண்டு விடுமுறை காலத்தில் அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட ஏனைய அரச சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட துறைசார் அமைச்சுக்கள் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் பண்டிகை காலத்தில் நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்குமான விரிவான வேலைத்திட்டத்தை செயற்படுத்துமாறும் ஜனாதிபதி பாதுகாப்புத் துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

