Last Updated:
தனியார் விடுதியில் கிரிஷ் ஜோடங்கர் தலைமையில் ஆலோசனை நடைபெற்ற நிலையில், திமுக உடனான பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை.
வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் புதுச்சேரியில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 17 இடங்களில் போட்டியிட விரும்பிய காங்கிரஸ், திமுகவிற்கு 11 தொகுதிகளும் விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஓர் இடங்களும் ஒதுக்க முன்வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், 30 தொகுதிகளையும் சரி சமமாக பிரிக்க திமுக கூறியதாக கூறப்படுகிறது.
வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை ஒரு நாள் மட்டும் உள்ளதால் சனிக்கிழமை தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய திட்டமிட்டு, ஜெகத்ரட்சகன் எம்பி உள்ளிட்ட குழுவினர் தனியார் ஹோட்டலில் காலை 10 மணி முதல் காத்திருந்தனர்.
சுமார் 12 மணி நேரம் காத்திருந்தும், காங்கிரஸ் குழுவினர் வராததால் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் சென்னை புறப்பட்டனர். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை தொடரவே திமுக விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், தனியார் விடுதியில் கிரிஷ் ஜோடங்கர் தலைமையில் ஆலோசனை நடைபெற்ற நிலையில், திமுக உடனான பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை.
இதற்கிடையேதான் புதுச்சேரி இழுபறி தொடர்பாக அம்மாநில திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்க உள்ளார். புதுச்சேரியில் வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், மீண்டும் காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்துவதா அல்லது காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து விட்டு மற்ற கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதா என முதல்வர் ஸ்டாலின் உடன் ஜெகத்ரட்சகன் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் திமுக எடுக்கப்போகும் முடிவு என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தான் இதே விஷயம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சந்தித்து பேச இருக்கிறார். இன்னும் சில மணி நேரங்களில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Puducherry (Pondicherry),Puducherry,Puducherry (Pondicherry)
Mar 22, 2026 10:17 AM IST
புதுச்சேரி தேர்தல் – திமுக எடுக்கப்போகும் முடிவு என்ன? – முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் ப. சிதம்பரம்!


