• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

புதுச்சேரியில் 13ஆம் தேதி புதிய அரசு பதவி ஏற்பு… பாஜகவுக்கு சபாநாயகர் பதவி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 8, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
புதுச்சேரியில் 13ஆம் தேதி புதிய அரசு பதவி ஏற்பு… பாஜகவுக்கு சபாநாயகர் பதவி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 08, 2026 7:06 PM IST

புதுச்சேரியில் 13ஆம் தேதி என்.ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் என்.டி.ஏ அரசு பதவி ஏற்கிறது.

News18
News18

புதுச்சேரியில் வரும் 13ஆம் தேதி முதலமைச்சர் என்.ரங்கசாமி தலைமையிலான அரசு பதவி ஏற்கிறது.

புதுச்சேரியில் கடந்த 9ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் கடந்த மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரியில், 16 தொகுதிகளில் வென்றால் ஆட்சியைப் பிடிக்கலாம்.

இந்த நிலையில், நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி 18 தொகுதிகளில் வென்றது. அதன்படி, என்.ஆர். காங்கிரஸ் தனியாக 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், அதிமுக மற்றும் எல்.ஜே.கே. ஆகியவை தலா ஒரு இடங்களிலும் வென்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து, என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான என். ரங்கசாமி, புதுச்சேரி பாஜக தலைவர் ராமலிங்கம் ஆகியோர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

பெரும்பான்மை இருப்பதைத் தொடர்ந்து என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை அமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார். இதன் மூலம், புதுச்சேரியில் வரும் 13ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11.15 மணிக்கு முதலமைச்சர் ரங்கசாமி பதவி ஏற்கிறார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்துவைக்க இருக்கிறார். ஆளுநர் மாளிகையில் இந்த பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி பாஜக தலைவர் ராமலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “கடந்த முறை போலவே பாஜகவுக்கு இரண்டு அமைச்சர்கள், சபாநாயகர் பதவி கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Location :

Puducherry (Pondicherry)

Read More

Previous Post

Tamilmirror Online || விவசாயிடம் கைத்துப்பாக்கி: வௌியான அதிர்ச்சி தகவல்!

Next Post

மலேசியாவின் பாதுகாப்புத் திட்டங்களுக்குப் பாதிப்பா? அமைச்சர் காலித் விளக்கம் அளிக்க வலியுறுத்தல் – Malaysiakini

Next Post

மலேசியாவின் பாதுகாப்புத் திட்டங்களுக்குப் பாதிப்பா? அமைச்சர் காலித் விளக்கம் அளிக்க வலியுறுத்தல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin